புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர், என்று பிரதமர் கூறினார்
தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறிழைத்துள்ளனர் மற்றும் அதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு படைகள் செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
இந்தியாவை சீர்குலைத்துவிட முடியும் என்ற மாயையிலேயே இருக்கக் கூடாது என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
இந்திய வீரர்களின் வீரம் மற்றும் பெருமையை பிரதமர் பாராட்டுகிறார்
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டனர், அதற்காக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்புப் படைகள் செயல்பட முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர், இந்தியாவைச் சீர்குலைத்து விட முடியும் என்கிற மாயையில் பாகிஸ்தான் வாழக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
புதுதில்லி ரயில் நிலையத்தில் இன்று, புதுதில்லி – வாரணாசி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அக்கூட்டத்தில், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் கூறியதாவது:
‘‘புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு முதலில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். துயரமான இந்த நேரத்தில், தங்களின் அன்பானவரையும், நெருங்கிய உறவையும் இழந்து வாடும் வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்திருக்கும் சம்பவத்தை பார்த்து நீங்கள் ரத்தம் கொதித்துப் போய், மிகுந்த கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். இந்த நேரத்தில், வலுவான பதிலடி தர வேண்டுமென்ற உணர்வும், எதிர்பார்ப்பும் ஏற்படுவது இயல்பானதே.
பாதுகாப்புப் படைகளுக்கு நாங்கள் முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளோம். நம் பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மீதும், வீரத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்த தேசப்பற்று, நமது விசாரணை அமைப்புகளுக்கு மக்கள் சரியான தகவல்களை வழங்கச் செய்து, அதன் மூலம் பயங்கரவாதத்தை நசுக்கும் நமது முயற்சிகள் தீவிரமடையும் என நம்புகிறேன்.
பயங்கரவாத அமைப்புகளுக்கும், அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும், உடந்தையாக இருப்பவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, அவர்கள் மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார்கள். அந்த காரியத்திற்காக அவர்கள் மிக அதிகமான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள், இத்தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
எங்களை விமர்சிப்பவர்களின் உணர்வுகளை நானும் புரிந்து கொள்கிறேன். அவர்களுக்கு முழு உரிமை உண்டு. எவ்வாறாயினும், எனது அனைத்து நண்பர்களுக்கும் நான் விடுக்கும் கோரிக்கையானது, இது மிகுந்த உணர்வுப்பூர்வமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். இதில் தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில் அனைவரும் தேசத்தோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே ஆகும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரே குரலில் நாம் பேச வேண்டும். நாம் ஒரே நாடு, தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையில் ஒரே குரல், அது நாம் வெற்றி பெறும் சண்டை என்ற செய்திதான் உலகம் முழுவதும் செல்ல வேண்டும்.
ஏற்கனவே உலகளாவிய சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நமது அண்டை நாடானது, அதன் அதிருப்தி நடவடிக்கை மற்றும் செயலற்ற வடிவமைப்புகளுடன் இந்தியாவை சீர்குலைத்து விட முடியும் என்ற மாயையில் இருக்கலாம். இந்தியாவை சீர்குலைக்க காணும் பகல் கனவை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூறுகிறேன். பொருளாதார நம்பிக்கையின்றி இருக்கிற நமது அண்டை நாடு,
இந்தியாவைச் சீர்குலைக்கும் முயற்சி தோல்வியடையும் என்றும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
இத்தகைய வழிகளைப் பின்பற்றுவோர் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள் என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியவாறு. நாங்கள் ஏற்றுக் கொண்ட பாதை முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கான பாதையாகும்.
இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் அல்லது தாக்குதலுக்கும் 130 கோடி இந்தியர்களும் சரியான பதிலடி தருவார்கள். பல பெரிய நாடுகளும் கூட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து, இந்தியாவின் பக்கம் நிற்பதாகவும், இந்தியாவுக்கு ஆதரவையும் வெளிப்படுத்தி உள்ளன. அந்த நாடுகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் கைகோர்க்கும்படி அவர்களிடம் வேண்டுகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் ஒன்றுபட்டால் மட்டுமே பயங்கரவாத அச்சுறுத்தலை போக்க முடியும்.
நண்பர்களே, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் துயரத்திலும், ஆழ்ந்த கோபத்திலும் உள்ளோம். இந்தத் தாக்குதலுக்கு வலுவான பதிலடியை நம் தேசம் அளிக்கும் என நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவை மிரட்ட முடியாது. எங்கள் துணிச்சலான வீரர்கள், தங்களின் இன்னுயிரைத் தந்துள்ளனர். அந்தத் தியாகிகள் இரண்டு கனவோடு வாழ்ந்தார்கள் ஒன்று சுரக்ஷா, தேசத்தின் பாதுகாப்பு, மற்றொன்று சம்ரிதி – தேசத்தின் வளர்ச்சி. நமது தியாகிகளை வணங்குகிறேன், அவர்களின் ஆசிர்வாதத்தோடு, தேசதத்திற்காக உயிரைத் தந்த அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அத்தனை முயற்சிகளையும் எடுப்போம் என உறுதி அளிக்கிறேன். தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, வளர்ச்சிக்குச் செல்லும் பாதையில் வேகத்தை அதிகரிக்க நாம் கடினமாக போராடுவோம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரசின் கருத்தாக்கம், வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றின் பின்னால் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் எனது பாராட்டுகள். சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இன்று புதுதில்லி –வாரணாசி இடையே தனது முதல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. இதுவே ஒரே பாரதம், அகண்ட பாரதம், வந்தே பாரதத்தின் பலமாகும்.
मैं पुलवामा के आतंकी हमले में शहीद जवानों को श्रद्धांजलि अर्पित करता हूं।
— PMO India (@PMOIndia) February 15, 2019
उन्होंने देश की सेवा करते हुए अपने प्राण न्योछावर किए हैं। दुःख की इस घड़ी में मेरी संवेदनाएं, उनके परिवारों के साथ हैं: PM
इस हमले की वजह से देश में जितना आक्रोश है, लोगों का खून खौल रहा है, ये मैं समझ रहा हूं।
— PMO India (@PMOIndia) February 15, 2019
इस समय जो देश की अपेक्षाएं हैं, कुछ कर गुजरने की भावनाएं हैं, वो स्वाभाविक है।
हमारे सुरक्षा बलों को पूर्ण स्वतंत्रता दी हुई है।
हमें अपने सैनिकों के शौर्य पर पूरा भरोसा है: PM
मुझे पूरा भरोसा है कि देशभक्ति के रंग में रंगे लोग सही जानकारियां भी हमारी एजेंसियों तक पहुंचाएंगे, ताकि आतंक को कुचलने में हमारी लड़ाई और तेज हो सके: PM
— PMO India (@PMOIndia) February 15, 2019
मैं आतंकी संगठनों को और उनके सरपरस्तों को कहना चाहता हूं कि वो बहुत बड़ी गलती कर गए हैं।
— PMO India (@PMOIndia) February 15, 2019
मैं देश को भरोसा देता हूं कि हमले के पीछे जो ताकते हैं, इस हमले के जो भी गुनहगार हैं, उन्हें उनके किए की सज़ा अवश्य मिलेगी: PM
जो हमारी आलोचना कर रहे हैं, उनकी भावनाओं को भी मैं समझ रहा हूं। उनका पूरा अधिकार है।
— PMO India (@PMOIndia) February 15, 2019
लेकिन मेरा सभी साथियों से अनुरोध है कि, ये बहुत ही संवेदनशील और भावुक समय है, इसलिए राजनीतिक छींटाकशी से दूर रहें। इस हमले का देश एकजुट होकर मुकाबला कर रहा है, ये स्वर विश्व में जाना चाहिए: PM
पूरे विश्व में अलग-थलग पड़ चुका हमारा पड़ोसी देश अगर ये समझता है कि जिस तरह के कृत्य वो कर रहा है, जिस तरह की साजिशें रच रहा है, उससे भारत में अस्थिरता पैदा करने में सफल हो जाएगा, तो वो बहुत बड़ी भूल कर रहा है: PM
— PMO India (@PMOIndia) February 15, 2019
इस समय बड़ी आर्थिक बदहाली के दौर से गुजर रहे हमारे पड़ोसी देश को ये भी लगता है कि वो ऐसी तबाही मचाकर, भारत को बदहाल कर सकता है। उसके ये मंसूबे भी कभी पूरे नहीं होंगे।
— PMO India (@PMOIndia) February 15, 2019
130 करोड़ हिंदुस्तानी ऐसी हर साजिश, ऐसे हर हमले का मुंहतोड़ जवाब देंगे: PM
साथियों, पुलवामा हमले के बाद, अभी मन: स्थिति और माहौल दुःख और साथ ही साथ आक्रोश का है।
— PMO India (@PMOIndia) February 15, 2019
ऐसे हमलों का देश डटकर मुकाबला करेगा, रुकने वाला नहीं है: PM