பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் ஏழைகளின் நலனில் தீவிரம் காட்டி வருகிறார். கடைக்கோடி நபரையும் நலத்திட்டங்கள் சென்றடைவது என்ற (அந்த்யோதயா) கொள்கையால் வழிநடத்தப்பட்டு, சமூகத்தின் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பவராகவும் இருந்து வருகிறார். பிரதமர் மோடியின் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியின் முற்போக்கான பார்வை கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசால் தொடங்கப்பட்ட முக்கிய கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உந்து சக்தியாக உள்ளது.
பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைக்கான இணைப்பை வழங்கி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூகத்தை உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குதல்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
SM/CJL/DL
Formulating a socially inclusive nation by providing equal opportunities to the marginalised sections.#9YearsOfGaribKalyanhttps://t.co/DMgwnKfmhR
— PMO India (@PMOIndia) June 1, 2023