Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனே எஸ்.பி கல்லூரியில் 2023, டிசம்பர் 14 அன்று நடைபெற்ற மிகப்பெரிய வாசிப்பு செயல்பாட்டின் கின்னஸ் உலக சாதனையைப் பிரதமர் பாராட்டினார்


புனே எஸ்.பி கல்லூரியில் 2023, டிசம்பர் 14 அன்று 3066 பெற்றோர்கள் கதைசொல்லல் மூலம் சமூகத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காகத் தங்கள் குழந்தைகளுக்கு வாசித்த மிகப்பெரிய வாசிப்பு செயல்பாட்டின் கின்னஸ் உலக சாதனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் நேஷனல் புக் டிரஸ்ட் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“வாசிப்பின் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கான பாராட்டுக்குரிய முயற்சி. சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுகள்.”

***

(Release ID: 1986292)

ANU/SMB/PKV/RR/KRS