Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனேயின் தேஹுவில் ஜெகத்குரு பக்த துக்காராம் மகராஜ் மலைக்கோவில் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

புனேயின் தேஹுவில் ஜெகத்குரு பக்த துக்காராம் மகராஜ் மலைக்கோவில் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


ஸ்ரீ விட்டலாய நமஹ,

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் திரு.அஜித் பவார் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு.தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு. சந்திரகாந்த் பாட்டில் அவர்களே, வர்காரி துறவி திரு.முரளி பாபா குரேகர் அவர்களே, ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் சன்ஸ்தான் தலைவர் நிதின் மோரே அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்.

புண்ணிய பூமியான தேஹுவில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  துறவிகளின் சத்சங்கம் மனிதப்பிறப்பில் அரிய சிறப்புரிமையாகும். துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை தானாக உணர முடியும். இந்தப் புனித புண்ணிய பூமியான தேஹுவுக்கு இன்று வந்தபோது அதே உணர்வை நான் பெற்றேன். தேஹு மலைக்கோவில் பக்தியின் ஆற்றல் மையமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாச்சார எதிர்காலத்தின் வழியாகும். கோவிலின் அறக்கட்டளைக்கும் இந்த ஆலயத்தை கட்டமைத்த அனைத்து பக்தர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 உலகில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான நாகரீகங்களில் ஒன்றாக இருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகும். இதற்கான பெருமை யாரையாவது சாரவேண்டுமானால் அது   துறவிகள் மற்றும் முனிவர்களின் பாரம்பரியத்துக்கு சொந்தமானதாகும். இந்தியா துறவிகளின் பூமிக்காக இருப்பதே இந்தியாவின் நிலைத்தன்மைக்கு காரணமாகும். ஒவ்வொரு யுகத்திலும் சில சிறந்த ஆன்மா நமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் வழியை காட்டி வந்தன.

பக்த துக்காராமின் அன்பு, கருணை, சேவை ஆகியவை அவரது பாடல்களின் வடிவில் இன்னும் உள்ளன. அவை காலாகாலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளன.  இன்றைக்கும் நாடு தனது கலாச்சார மாண்புகளுடன் முன்னேறி செல்வதற்கு துக்காராமின் பாடல்கள் நமக்கு சக்தியை அளிக்கின்றன. மனிதர்களுக்கு இடையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் போதனைகள் ஆன்மீக பக்தியை ஏற்படுத்துவதால், இது நாட்டின் பக்திக்கும் சமுதாயத்துக்கும் ஏற்றதாக உள்ளது. இந்த சிறந்த பாரம்பரியங்களால் உந்தப்பட்டதுதான் அனைவருடன், அனவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் என்ற மந்திரமாகும். தலித், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தொழிலாளர்களின் நலன்களே இன்று நாட்டின் முதல் முன்னுரிமையாகும்.    

சத்ரபதி சிவாஜி மகராஜ் போன்ற தேசிய வீரர்களின் வாழ்க்கையில் பக்த துக்காராம் போன்ற துறவிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.  சுதந்திரப் போராட்டத்தின்போது வீரசாவர்கர் தண்டிக்கப்பட்ட போது, கைவிலங்கை இசைக்கருவி போல பயன்படுத்தி, அவர்  துக்காராமின் பாடல்களை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பல்வேறு சமயங்களில் பக்த துக்காராம் நாட்டிற்கு சக்தியையும், எழுச்சியையும் புகுத்தியுள்ளார். பந்தர்பூர், ஜெகன்னாத், மதுராவில் பிரிஜ் பரிக்ரமா, காசியில் பஞ்ச் கோசி பரிக்ரமா, சார் தாம் அல்லது அமர்நாத் யாத்திரை போன்ற யாத்திரைகள் நாட்டின் வேற்றுமையை ஒன்றுபடுத்தி, ஒரேபாரதம் – உன்னத பாரதம் என்ற எழுச்சியை உருவாக்கியுள்ளன.

நமது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த நமது பழைய அடையாளம் மற்றும் பாரம்பரியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமையாகும். ஆகவே, நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்ததாக மாறியுள்ள நிலையில், வளர்ச்சியும் பாரம்பரியமும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். பிரசாத் திட்டத்தின்கீழ், புனித யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ராமாயண சுற்றுலா, பஞ்ச தீர்த்த பாபா சாஹேப் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரது முயற்சிகளும் சரியான திசையில் ஒன்று சேர்ந்தால், எத்தகைய தீவிரமான சிக்கல்களுக்கும் தீர்வுகாண முடியும்.  சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டில் நாடு நலத்திட்டங்களை 100 சதவீதம் முன்னேற்ற உறுதிபூண்டுள்ளது.  இந்தத் திட்டங்கள் மூலம் ஏழைகள் அடிப்படை வசதிகளை பெற்று வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரது பங்களிப்பும் அவசியமாகும். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் தூய்மையை பராமரிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.  இத்தகைய தேசிய உறுதிமொழிகள், ஆன்மீக உறுதிமொழிகளின் பகுதியாக இருக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி, ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி, ஹர ஹர மகாதேவ்!

***************