பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று (12.10.2021) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புனரமைப்புக்கான அடல் இயக்கம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு 2.0 (அம்ருத் 2.0) திட்டத்தை 2025-26 வரை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள நகரங்களை “தண்ணீர் பாதுகாப்பு” மற்றும் “சுயநிலைத்தன்மை” பெற்றவையாக மாற்றி தற்சார்பு இந்தியாவை அடையும் நோக்கில் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில், நம்பகமான குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவது தேசிய முன்னுரிமைத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2,77,000 கோடி ஆகும்.
4378 நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க அம்ருத் 2.0-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 அம்ருத் நகரங்களில் வீடுகளில் 100% கழிவு மேலாண்மையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2.68 கோடி குழாய் வழி குடிநீர் இணைப்புகள் மற்றும் 2.64 கோடி கழிவு நீர் அகற்றும் இணைப்புகளை வழங்குவதன் மூலம் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
••••••