Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரை

புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரை

புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரை

புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரை


 

மாண்புமிகு மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன் அவர்களே, அமைச்சரவைச் சகாக்களே, திரு. அனந்த்குமார் அவர்களே, திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, மக்களவைக் குழுத் தலைவர் திரு. சுரேஷ் அங்காடி அவர்களே, இங்கே கூடியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களே வணக்கம்.

இது போன்ற சாதாரண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குக் கூட பிரதமர் நேரத்தை ஒதுக்குகிறார் என்று சிலர் இங்கே பேசினர். இது அப்படி சாதாரண நிகழ்ச்சி அல்ல. காரணம், நீங்கள் அனைவரும் உழைத்து பெரிய காரியத்தை நிறைவேற்றி, இதை உருவாக்கியுள்ளீர்கள்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போது அவையில் நிகழும் சம்பவங்களைப் பொதுமக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். அப்போது, பல சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களையும் அவர்களை மக்களவைத் தலைவர் கட்டுப்படுத்துவதையும், இருக்கைக்குச் செல்லும்படி உத்தரவிடுவதையும் பார்க்கிறார்கள். அந்த சம்பவங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவருக்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொள்வதையும் மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். ஆனால், அவையை நடத்தும் திருமதி சுமித்ரா மகாஜன் அவர்கள் ஒரு தாயைப் போல் அமர்ந்தபடி செயல்படுகிறார். அதே சமயம் அவையில் 500 உறுப்பினர்களும் அவரது பணிக்கு இடையூறு செய்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள்.

 

 

அதே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்புதில் அவர் ஓர் அக்கறை கொண்ட தாயாக இருப்பதை, இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு பார்க்கப் போகிறது. அத்தகைய தாயுள்ளத்தால்தான் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்களுக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன் உறுப்பினர்களின் செயல்களை ஒழுங்குபடுத்துபவர் மட்டுமல்ல, உறுப்பினர்களின் நலன்களிலும் அக்கறை கொண்டவர் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் உணர்ந்து கொள்வர். அவரது செயல் குழந்தைகளின் மீது தாய் காட்டும் அக்கறையைப் போன்றது. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

மக்களவைத் தலைவர் அம்மையார் அவர்களே, சக எம்.பி.க்கள் குடும்பத்துக்காக இத்தகைய கட்டடம் கட்டியதற்காக நான் உள்பட  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பொதுவாக, கட்டட ஒப்பந்ததாரர்களை விட அரசுத் துறைகளின் பணிகள் மோசமாக இருப்பது உண்டு. எனினும், அரசுத் துறை தன்னால் இயலக் கூடிய ஒரு நல்ல காரியத்தைச் செய்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டால், அது நிறைவேற்றப்பட்டுவிடும். அதுவும் உரிய நேரத்தில், திட்டமிட்ட செலவில் செய்து முடிக்கப்படும்.

இவையெல்லாம் இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் வகிக்கும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை  உரிய வகையில் நிறைவேற்றியிருக்கிறது. எனவே, இப்பணியை நல்ல வகையில் நிறைவேற்றிய அனைத்து அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாடாளுமன்றத்துடன் புதிதாக ஒரு கட்டடம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற வளாகம் வரலாற்றுச் சிறப்புள்ள இடம். 1926ம் ஆண்டு ஆவணங்களைப் படித்தால் தெரியும். லாலா லஜபதி ராயும், மோதிலால் நேருவும் இங்கே தங்கியதை ஆவணங்களைப் படித்தால் தெரியும். அத்தகைய பாரம்பரியம் மிக்க இடத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

நாம் எழுப்பும் இத்தகைய நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளையும் நாமே உருவாக்கித் தருகிறோம். இந்தக் கட்டடத்தைத் திட்டமிட்ட காலத்துக்கு 4 அல்லது 6 மாதம் முன்பாகவே கட்டி முடித்து திறந்திருக்கிறோம்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே (தில்லி) தங்குவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் கிடைப்பதில்லை. காரணம், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த எம்.பி.க்கள், போட்டியிடாத எம்.பி.க்கள் தாங்கள் ஏற்கெனவே குடியிருந்த அரசு இல்லங்களைக் காலி செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக, புதிய எம்.பி.க்கள் இடம் கிடைக்காமல், நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள். அதற்கு ஏராளமாகச் செலவாகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சேவையை ஆற்றியிருக்கிறீர்கள். நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஹோட்டல்களில் தங்குவதற்குப் பதில் இங்கு வந்து தங்கலாம். அரசுக்குச் செலவு மிச்சமாகும். இது வசதியை மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய மரியாதையையும் அளிக்கிறது.

திருமதி சுமித்ரா அம்மையார் சொன்னதைப் போல் எனது சகாக்கள் திரு மேகாவால், திரு. சுரேஷ் ஆகியோர் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு இதை நிறைவேற்றியுள்ளனர். எனது நண்பர் திரு. ரூடியும் இதில் அதிக  ஆர்வம் காட்டியுள்ளார். எனக்குக் கட்டடக் கலை குறித்து அதிகம் தெரியாது. ஆனால், திரு. ரூடிக்குத் தெரியும் அதனால், இக்கட்டடம் உருவாகும்போது, புதிய புதிய யோசனைகளுடன் செயல்படுவார். இப்படி ஓர் அழகான கட்டடம் உருவாகிவிட்டதால், எல்லோரும் இதைக் கண்டு மகிழ்வது இயல்புதானே!

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தில்லியில் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் நினைவாக கட்டடம் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அதற்குப் பின்னால் வந்த அரசு ஏதோ அம்பேத்கர் பெயரில் தாங்கள் மட்டுமே அரசியல் நடத்துவதைப் போல் காட்டிக் கொண்டனர். ஆனால், வாஜ்பாய் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உரிய நேரத்தில் அவற்றையெல்லாம் நிறைவேற்றினோம்.

அடுத்தது, இதற்கான அடிக்கல்லை நான் நாட்டியபோதே, ‘இந்த நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு, 2018ம் ஆண்டு ஏப்ரலில் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கிறேன்என்று அறிவித்தேன். அதைப்போல் அலிப்பூர் சாலையில் அம்பேத்கர் வசித்துவந்த வீட்டை அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு முன் தினம் ஏப்ரல் 13ம் தேதி அர்ப்பணிக்கப் போகிறேன் என்று இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.

எங்களது நாடி நரம்புகளில் கொஞ்சம் மரியாதை, கொஞ்சம் கொள்கைகள், கொஞ்சம் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஓடுகின்றன. எங்களது பணிகளின் மூலம் அவற்றையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறோம். அநேகமாக வேறு எந்த அரசும் டாக்டர் அம்பேத்கருக்கு இதைப் போன்ற மரியாதையையும் கவுரவத்தையும் எங்களது அரசைப் போல யாரும் அளிக்கவில்லை. பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரை அரசியலுக்காக இழுப்பதைத் தவிர்த்துவிட்டு, சகோதரத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரது வழிகளைப் பின்பற்றுவதுதான் இன்றியமையாதது. அதைப் புறந்தள்ளிவிட்டு முன்னேற்றத்தை எட்ட முடியாது.

அனைவருக்கும் நலம் பயக்கும் விதத்தில் அமைந்த அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம்’ (Sabka Sath-Sabka Vikas) என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் நாம் முன்னேற்றத்தை எட்டி வருகிறோம். சமுதாயத்தில் கடைநிலையில் இருப்பவனது உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக நாம் வாழ்கிறோம், அல்லது உயிர் கொடுக்கிறோம்.

சமுதாயத்தில் கடைசியில் இருப்பவனுக்காக கவலைப்படும் முதல் ஆளாக நாம்தான் இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி நமக்குக் காட்டிய வழியைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வருகிறோம். அதுதான் நமது அரசாங்கத்தின் கடமையும் ஆகும். அதைத்தான் இந்த அரசும் செய்து வருகிறது.

இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

***