Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுமையான முயற்சிகள் மற்றும் வளங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது: பிரதமர்


புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்துள்ள திரு மோடி கூறியிருப்பதாவது:

“இளம் குழந்தைகளுக்கு ஆழ்ந்த கற்றல், படைப்பாற்றலை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சார வேர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்துள்ளார். புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் தேசிய கல்விக் கொள்கை 2020 இந்த தொலைநோக்குப் பார்வையை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை அவர் குறிப்பிடுகிறார் – படித்து பார்க்கவும்!”

***

(Release ID: 2083052)
TS/PKV/RR/KR