புதுதில்லி விஞ்ஞான் பவனில் 16 வது குடிமைப்பணி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அரசு அதிகாரிகளிடையே உரையாற்றினார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பிரதமர் விருதுகளையும் அவர் வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், குடிமைப்பணி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்காக முன்னேறத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு குடிமைப்பணி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். 15-25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு அதிகாரிகளின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார். அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கப்போகும் இளம் அதிகாரிகளின் பங்கை வலியுறுத்தினார். இந்த அமிர்த காலத்தில் நாட்டுக்கு சேவை செய்யும் இளம் அதிகாரிகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். “தேசத்தின் ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரின் கனவுகளையும் நிறைவேற்றும் பொறுப்பு ஒவ்வொரு தோளிலும் உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த 9 ஆண்டுகளில் ஆற்றிய பணிகளால் நாடு முழுவீச்சில் பயணிக்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் கூறினார். ஒரே அதிகாரத்துவம் மற்றும் பணியாளர்களுடன் வெவ்வேறு முடிவுகள் பெறப்படுகின்றன என்று அவர் கூறினார். உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் மதிப்பு, நல்லாட்சி மீது ஏழைகளின் வளர்ந்து வரும் நம்பிக்கை, நாட்டின் வளர்ச்சியின் புதிய வேகம் ஆகியவற்றுக்கான கர்மயோகிகளின் பங்கு அளப்பரியது என அவர் ஒப்புக்கொண்டார். உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்து வருவதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், செலவு குறைவான மொபைல் டேட்டா நாடுகளில் ஒன்றாகவும், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பாகவும் உள்ளதால், ஃபின்டெக்கில் முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். கிராமப்புறப் பொருளாதாரம், ரயில்வே, நெடுஞ்சாலைகள், துறைமுகத் திறன் அதிகரிப்பு மற்றும் விமான நிலையங்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் மாற்றங்கள் குறித்து அவர் குறிப்பிட்டார். இன்றைய விருதுகள் கர்மயோகிகளின் பங்களிப்பையும் சேவை உணர்வையும் பிரதிபலிக்கின்றன என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆற்றிய உரையை குறிப்பிட்ட பிரதமர் வளர்ந்த இந்தியாவின் முன்னேற்றம், அடிமை மனப்பான்மையை உடைத்தல், இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமைப்படுதல், ஒற்றுமையை வலுப்படுத்துதல் போன்ற ஐந்து உறுதிமொழிகளை நினைவு கூர்ந்தார். இந்த ஐந்து தீர்மானங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல், நாட்டை உலகில் தகுதியான இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்று பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.
வளர்ந்த பாரதம் என்ற இந்த ஆண்டு குடிமைப்பணி தின கருப்பொருளில் உரையாற்றிய பிரதமர், இந்தக் கருத்து நவீன உள்கட்டமைப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றார். “இந்தியாவின் அரசு அமைப்பு ஒவ்வொரு இந்தியனின் அபிலாஷைகளை ஆதரிப்பதும், ஒவ்வொரு அரசு ஊழியரும் ஒவ்வொரு குடிமகனின் கனவுகளை நனவாக்க உதவுவதும், முந்தைய ஆண்டுகளில் அமைப்புடன் தொடர்புடைய எதிர்மறையான தன்மையையும் நேர்மறையாக மாற்றுவதும் ஆகும்” என்று பிரதமர் கூறினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல தசாப்த கால அனுபவத்தைக் குறிப்பிட்ட பிரதமர், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடைசி பயனாளி வரை செல்லும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். முந்தைய அரசுகளின் கொள்கைகளின் முடிவுகளை அவர் எடுத்துக்காட்டினார். 4 கோடிக்கும் அதிகமான போலி எரிவாயு இணைப்புகள், 4 கோடிக்கும் அதிகமான போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 1 கோடி கற்பனையான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நல அமைச்சகத்தால் தோராயமாக 30 லட்சம் இளைஞர்களுக்கு போலி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது, மேலும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இதுவரை இல்லாத தொழிலாளர்களின் பலன்களை மாற்றுவதற்காக லட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கப்பட்டன. இதனால் நாட்டில் ஊழல் நிறைந்த சூழல் உருவாகியிருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் சேமிக்கப்பட்டு, தற்போது ஏழைகளின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அரசு அதிகாரிகளை அவர் பாராட்டினார்.
நேரம் குறைவாக இருக்கும்போது, வேலை செய்யும் பாணியை தீர்மானிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். “இன்றைய சவால் செயல்திறன் பற்றியது அல்ல, ஆனால் குறைபாடுகளைக் கண்டறிந்து நீக்குவது எப்படி” என்பதைப்பற்றியது என்று அவர் கூறினார். பற்றாக்குறை என்ற போர்வையில் சிறிய அம்சத்தைக் கூட கட்டுப்படுத்த முயற்சித்த காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். இன்று அதே குறைபாடானது செயல்திறனாக மாற்றப்பட்டு அமைப்பில் உள்ள தடைகளை நீக்கி வருகின்றது என அவர் தெரிவித்தார். “முன்பு, அரசு எல்லாவற்றையும் செய்யும் என்ற எண்ணம் இருந்தது, இப்போது அரசு அனைவருக்கும் வேலை செய்யும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அனைவருக்கும் சேவை செய்ய நேரத்தையும் வளங்களையும் திறமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். “அரசின் முழக்கம் ‘முதலில் நாடு முதலில் மக்கள்’ என்பதுதான், இன்றைய அரசின் முன்னுரிமை பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்” என்று குறிப்பிட்ட பிரதமர், அரசு முன்னேற விரும்பும் மாவட்டங்கள் வரையிலும், ஆர்வமுள்ள தொகுதிகள் வரையிலும் செல்கிறது என்று தெரிவித்தார். இன்றைய அரசு எல்லைக் கிராமங்களை கடைசி கிராமங்களாகக் கருதாமல் முதல் கிராமங்களாகக் கருதுகிறது என்றார் அவர். 100 சதவீத செறிவூட்டலுக்கு, இன்னும் அதிக கடின உழைப்பு மற்றும் புதுமையான தீர்வுகள் தேவைப்படும் என்று அவர் கூறினார். எளிதாக வாழ்வதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கும் நாம் தீர்வு காண வேண்டும் என்றார் அவர் .
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தை சுட்டிக்காட்டி, எந்தவொரு உள்கட்டமைப்புத் திட்டத்திற்கும் தொடர்புடைய அனைத்து தரவு அடுக்குகளையும் ஒரே தளத்தில் காணலாம் என்று விளக்கிய பிரதமர், சமூகத் துறையில் சிறந்த திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்கு அதை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குடிமக்களின் தேவைகளைக் கண்டறிவதிலும், எதிர்காலத்தில் எழக்கூடிய கல்வி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதிலும், துறைகள், மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதிலும், எதிர்கால உத்திகளை வகுப்பதிலும் இது பெரிதும் பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார். விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலமானது மிகப்பெரிய சவால்களோடு சேர்த்து, வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய உணர்வுமிக்க நாட்டுமக்கள் மாற்றத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க விரும்புவதில்லை. இதற்கு நமது முழு முயற்சி அவசியமாகிறது என்றார். மிகவேகமாக முடிவுகளை எடுக்கப்பட்டு அதற்கு செயல்வடிவம் கொடுப்பதையே இந்தியாவிடமிருந்து உலகின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு சமீப காலமாக மிக அதிக அளவு உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கான நேரம் வந்து விட்டது என்று உலக அரங்கில் பேசப்பட்டு வரும் நிலையில், நமது நாட்டில் ஆட்சியாளர்கள் நேரத்தை வீணடிக்கவே கூடாது என்பது தெள்ளத்தெளிவாகிறது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவதற்கு நம் நாடு உங்கள் மீதும், உங்கள் செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளது. உங்களது முடிவுகள் நாட்டு நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறு கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் இருக்கும் போது, எந்த அரசியல் கட்சி ஆட்சியில் உள்ளதோ, அவர்கள் நாட்டு நலனில் அக்கறை கொண்ட வகையில் வரி கட்டுபவர்களின் பணம் செலவிடப்படுகிறதா என்பதை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். “எந்த அரசியல் கட்சி ஆட்சியில் உள்ளதோ, அவர்கள் வரி கட்டுபவர்களின் பணம் நாட்டு நலனுக்காக செலவிடப்படுகிறதா என்பதை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். “அதாவது அவர்கள் அந்தப்பணத்தின் மூலம் வாக்கு வங்கியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார்களா? அல்லது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் பயன்படுத்துகிறார்களா; தங்கள் அரசு கஜனாவை காலி செய்து, தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்கிறார்களா அல்லது மக்களின் வாழ்க்கைத்தரத்தை கருத்தில் கொள்கிறார்களா; தங்கள் சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார்களா, அல்லது பணியாளர் தேர்ந்தெடுக்கும் முறையில் வெளிப்படையான நடைமுறையை பின்பற்றுகிறார்களா?” அதிகாரத்துவம் குறித்த இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் படேலை நினைவு கூர்ந்த பிரதமர், இளைய சமுதாயத்தினரின் கனவு மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக செயல்படுவதற்கான நேரம் இது என்பதை உறுதிசெய்ய வேண்டும். மாறாக இளைய சமுதாயத்தினரின் கனவுகளை வரி கட்டுபவர்களின் பணத்தை கொண்டே அழித்துவிடக்கூடாது.
வாழ்க்கையில் இரண்டுவிதமான அணுகுமுறைகள் உள்ளது. ஒன்று, பணிகளை முடித்துக்காட்டுவது, இரண்டாவது அதுவாகவே நடக்கட்டும் என்று விட்டுவிடுவது. இதில் முதலாவது ஆற்றலுடன் கூடிய அணுகுமுறையாகும். இரண்டாவது மந்தநிலையை காட்டும் அணுகுமுறையாகும். பணிகளை முடித்துக்காட்டுவதில் நம்பிக்கை கொண்ட மக்கள், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தங்களின் குழுக்களுக்கு உந்துசக்தியாக விளங்குவார்கள். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் இந்த நெருப்பானது உங்களின் அதிகாரத்தை என்றும் நினைவில் வைத்துகொள்ளும் வகையில் விளங்கும். உங்களுக்கு நீங்கள் என்ன செய்து கொண்டீர்களோ, அதனடிப்படையில் உங்களை கணக்கிட முடியாது. மாறாக மக்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தீர்களோ, அதன் அடிப்படையிலேயே உங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்று கூடியிருந்த கர்மயோகிகளிடம் பிரதமர் கூறினார். நல்லாட்சி அதிகாரமே முக்கியமானதாகும். மக்கள் சார்ந்த ஆட்சி முறை தான் பிரச்சனைகளை தீர்த்து நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். இதற்கு லட்சியங்களோடு முன்னேறி வரும் மாவட்டங்களை எடுத்துக்காட்டாக பிரதமர் கூறினார். அதாவது நல்லாட்சி அதிகாரம் உள்ள மாவட்டங்களில் வளர்ச்சி மேம்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு அங்குள்ள இளம் ஆற்றல்மிக்க அதிகாரிகளின் முயற்சியே காரணமாகும். மக்களின் பங்களிப்பின் மீது முக்கியத்துவம் செலுத்தும் போது மக்கள் மத்தியில் ஒரு தனித்துவ சிந்தனை ஏற்படுகிறது. இந்த தனித்துவ சிந்தனையானது முன்னெப்போதும் இல்லாத அளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு உதாரணங்களாக தூய்மை இந்தியா, அம்ரித் சரோவர் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் பற்றி பிரதமர் குறிப்பிட்டு பேசினார். மாவட்ட தொலைநோக்குப் பார்வை@100 திட்டம் தயாரிப்பு நிலையில் உள்ளது. அந்தத் திட்டங்கள் பஞ்சாயத்து அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். பஞ்சாயத்துகள், தொகுதிகள், மாவட்டம், மாநிலம் போன்றவைகளில் எந்தத்துறைகள் மீது முக்கியத்துவம் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அறிந்து கொண்டு முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மேலும் எந்தப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தகுதி உடையது என்பது குறித்தும் தெளிவான பார்வை வேண்டும் என்றார். உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பதற்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களோடு சுய உதவி குழுக்களை இணைந்து செயலாற்றும் வகையில் ஒரு இணைப்புச் சங்கிலியை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். உள்ளூர் திறன், உள்ளூர் தொழில்முனைவோர் ஆற்றல் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவன அமைப்பு போன்றவற்றை ஊக்குவிப்பது மிக முக்கியமானதாகும் என்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் தலைமைப் பொறுப்பில் தான் இருப்பதை அடிக்கோடிட்டு காண்பித்த பிரதமர், குடிமைப்பணி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். செயல்திறனை உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்திய பிரதமர், குடிமைப்பணி அதிகாரிகள் மத்தியில் “கர்மயோகி இயக்கம்” மிகப்பெரிய அளவில் சென்றடைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். இந்த பிரச்சார இயக்கத்தை முழு ஆற்றலோடு ‘செயல்திறன் உருவாக்குதல் ஆணையம்’ எடுத்துசெல்கிறது. ஐகாட் தளம் மூலம் எல்லா இடங்களிலும் தரமான பயிற்சி சம்பந்தமான தகவல்கள் கிடைக்கப்பெறுகிறது. அடுத்த சில மாதங்களுக்கு பயிற்சி மற்றும் கற்றல் வெறும் சம்பிரதாய முறையில் அமைந்துவிடக்கூடாது. தற்போது ஐகாட் தளம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு, கர்மயோகி பிராரம்ப் மூலம் ஒருங்கிணைந்த பயிற்சி பெறுகின்றனர் என்றார்.
பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளுக்கு மாறாக அரசின் முன் முயற்சிகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர், தான் தொடர்ந்து செயலாளர்களையும், துணை செயலாளர்களையும், பயிற்சி அதிகாரிகளையும் சந்தித்து வருவதாக தெரிவித்தார். இதற்கு புத்தம் புதிய சிந்தனைகளோடு கூடிய அனைவரின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கு பல உத்வேகம் தரும் நிகழ்வுகளை பிரதமர் மேற்கோள் காட்டினார். முதல் ஆண்டுகளில் மாநிலங்களில் பணியாற்றிய பிறகே நியமன அதிகாரப்பணியில் மத்திய அரசு அதிகாரிகள் ஈடுபடும் நிலை இருந்தது. ஆனால் தற்போது குடிமைப்பணி அதிகாரிகள் தங்களது ஆரம்பம் முதலாகவே மத்திய அரசில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ள இந்த அமிர்த காலத்தில், அடுத்த 25 ஆண்டு கால நாட்டின் வளர்ச்சிக்கு கடமைதான் வேறு எதையும்விட முதன்மையானது என்பதுதான் நமது மந்திரமாக இருக்க வேண்டும். தனி நபர்களுக்கு மட்டுமல்ல, அமைப்புகளுக்கும் இது பொருந்தும். நம் நாட்டின் மக்களின் ஆற்றல் புதிய இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக இந்தியாவின் ஆற்றல் உயர்ந்துள்ளது. இந்தப் புதிய வளரும் இந்தியாவில் உங்களுக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி முக்கிய பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இறுதியாக, நமது தேசம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் பொழுது, இளம் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் வாய்ப்பு இருப்பதாக பிரதமர் கூறினார். நீங்கள் நாட்டின் புதிய அமைப்புகளை உருவாக்குவதற்கு பின்புலமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் நிலையில் இருந்ததாக பெருமைகொள்ளும் நிலை ஏற்படும் என்றார். தேசத்தை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு உங்களின் பங்கு விரிவடைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றார்.
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் திரு பி கே மிஸ்ரா, அமைச்சரவைச் செயலர் திரு ராஜீவ் கௌபா, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை செயலர் திரு பி ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னணி
தேசத்தை கட்டமைக்கும் பணியில் குடிமைப்பணி அதிகாரிகளின் பங்களிப்பை தொடர்ந்து பாராட்டி வரும் பிரதமர், அவர்களுக்கு ஊக்கமளித்து மேலும் அதிக ஆற்றலுடன் செயல்படுவதற்கு உற்சாகத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதிலும் உள்ள குடிமைப்பணி அதிகாரிகளுக்கு ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த விடுதலைப் பெருவிழாவின் அமிர்தகாலத்தில் அவர்கள் அதே உற்சாகத்துடன் பணியாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்வின் போது பொது நிர்வாகத்துறையில் சிறந்த ஆளுமைக்கான பிரதமர் விருதுகள் வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார். பொது மக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகச்சிறந்த மற்றும் புத்தாக்க சிந்தனையுடன் கூடிய பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 4 முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் மிகச்சிறந்த வகையில் செயல்பட்டதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. ஹர் கர் ஜல் (வீடுதோறும் குடிநீர் குழாய்) திட்டத்தின் கீழ் ஸ்வச் சுஜல் (சுத்தமான குடிநீர்) வழங்குவதை ஊக்குவித்தல், சுகாதாரம் மற்றும் உடல்தகுதி மையங்கள் மூலமாக ஸ்வஸ்த் பாரத் திட்டத்தை ஊக்குவித்தல், சமக்கிரஹா சிக்ஷா மூலம் தரமான சமச்சீர் கல்வியை வகுப்பறை சூழ்நிலையில் வழங்குவதை ஊக்குவித்தல், லட்சிய மாவட்டத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சி நிறைவான அணுகுமுறை மீதான சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சி. மேற் கூறப்பட்ட நான்கு அடையாளம் காணப்பட்டத் திட்டங்களுக்கு எட்டு விருதுகள் வழங்கப்படும். அதில் புத்தாக்க நடவடிக்கைகளுக்கு என்று ஏழு விருதுகள் வழங்கப்படும்.
***
(Release ID: 1918511)
SM/PKV/GS/AG/RR
On Civil Services Day, greetings to the civil servants, who are serving the nation with utmost diligence.
— Narendra Modi (@narendramodi) April 21, 2023
https://t.co/nhN0AmsmcG
It is our collective responsibility to fulfill the dreams of the freedom fighters in the Amrit Kaal. pic.twitter.com/JBkv7mLlvM
— PMO India (@PMOIndia) April 21, 2023
पिछले 9 वर्षों में भारत आज जहां पहुंचा है, उसने हमारे देश को बहुत ऊंची छलांग के लिए तैयार कर दिया है।
— PMO India (@PMOIndia) April 21, 2023
देश में ब्यूरोक्रेसी वही है, अधिकारी-कर्मचारी वही हैं लेकिन परिणाम बदल गए हैं। pic.twitter.com/noiOeWpLv1
पंच प्राणों की प्रेरणा से जो ऊर्जा निकलेगी, वो हमारे देश को वो ऊंचाई देगी, जिसका वो हमेशा से हकदार रहा है। pic.twitter.com/BtafIilYc0
— PMO India (@PMOIndia) April 21, 2023
For a developed India, the government system should support the aspirations of common people. pic.twitter.com/wasahMblNx
— PMO India (@PMOIndia) April 21, 2023
पहले ये सोच थी कि ‘सरकार सबकुछ करेगी’, लेकिन अब सोच है कि ‘सरकार सबके लिए करेगी’। pic.twitter.com/tKFnqeMUWN
— PMO India (@PMOIndia) April 21, 2023
आज की सरकार का ध्येय है- Nation First-Citizen First. pic.twitter.com/WqEq9p45pS
— PMO India (@PMOIndia) April 21, 2023
India's time has arrived. pic.twitter.com/z3S5EHCcVV
— PMO India (@PMOIndia) April 21, 2023
आज मैं भारत की ब्यूरोक्रेसी से, भारत के हर सरकारी कर्मचारी से, चाहे वो राज्य सरकार में हो या केंद्र सरकार में, एक आग्रह करना चाहता हूं: PM @narendramodi pic.twitter.com/5R0oL2chW0
— PMO India (@PMOIndia) April 21, 2023
Good Governance is the key. pic.twitter.com/f3uswKRq1V
— PMO India (@PMOIndia) April 21, 2023
कर्तव्य हमारे लिए विकल्प नहीं संकल्प हैं। pic.twitter.com/WfZzaVUwP1
— PMO India (@PMOIndia) April 21, 2023
At the programme to mark Civil Services Day, highlighted the efforts of our civil servants in taking India to new heights. pic.twitter.com/DnhcaZCBN2
— Narendra Modi (@narendramodi) April 21, 2023
‘विकसित भारत’ के लिए आवश्यक है कि हमारा सिस्टम देशवासियों के लिए हर प्रकार से मददगार बना रहे और उनकी आकांक्षाओं को पूरा करता रहे। pic.twitter.com/P7TGsPvWQV
— Narendra Modi (@narendramodi) April 21, 2023
देश के सिविल सेवकों के साथ ही केंद्र और राज्य सरकार के हर कर्मचारी से मेरा एक आग्रह है… pic.twitter.com/yKlqUOiNkN
— Narendra Modi (@narendramodi) April 21, 2023
It is important that the hard-earned money of the taxpayer is not misused. pic.twitter.com/3ohH9mnTz5
— Narendra Modi (@narendramodi) April 21, 2023