Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லி பாரத மண்டபத்தில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்


புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவன  மகா கும்பமேளாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஸ்டார்ட்அப் மகா கும்பமேளாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரத  நாடாக மாறுவதற்கான நாட்டின் செயல்திட்டத்தை வலியுறுத்தினார். கடந்த சில பத்தாண்டுகளாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் இந்தியா தனது முத்திரையை பதித்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தில் வளர்ந்து வரும் போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். எனவே, ஸ்டார்ட் அப் உலகைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்திருப்பது, இன்றைய சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிகள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், அவற்றை வெற்றிகரமானதாக மாற்றும் மேதைமை அம்சம் குறித்து கவனத்தை ஈர்த்தார். முதலீட்டாளர்கள், தொழில் காப்பகங்கள் , கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்காலத் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை  ஒப்புக் கொண்ட அவர், “இது உண்மையில் முன்னெப்போதும் இல்லாத ஆற்றலையும் அதிர்வையும் உருவாக்கும் உண்மையான வடிவத்தில் ஒரு மகா கும்பமேளாஎன்றார். மக்கள் தங்களது புதுமைகளை பெருமிதத்துடன் காட்சிப்படுத்திய விளையாட்டு மற்றும் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட போதும் இதே அதிர்வை அனுபவித்ததாக பிரதமர் குறிப்பிட்டார். “ஸ்டார்ட்அப் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் எந்தவொரு இந்தியரும் எதிர்காலத்தின் யூனிகார்ன் மற்றும் டெக்காகார்ன்களைக் காண்பார்கள்என்று பிரதமர் மோடி கூறினார்.

சரியான கொள்கைகள் காரணமாக நாட்டில் ஸ்டார்ட் அப் சூழலின் வளர்ச்சி குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். சமூகத்தில் ஸ்டார்ட்அப் என்ற கருத்தாக்கம் குறித்து ஆரம்பத்தில் தயக்கம் மற்றும் அலட்சியம் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் புதுமையான யோசனைகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு தளத்தை உருவாக்கியது என்று அவர் கூறினார். யோசனைகளை நிதி ஆதாரங்களுடன் இணைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது குறித்தும், கல்வி நிறுவனங்களில் தொழில் காப்பகங்கள் மூலம் 2 மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு வசதிகளை வழங்குவது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “ஸ்டார்ட் அப் ஒரு சமூக கலாச்சாரமாக மாறிவிட்டது, ஒரு சமூக கலாச்சாரத்தை யாராலும் தடுக்க முடியாதுஎன்று பிரதமர் கூறினார்.

விவசாயம், ஜவுளி, மருத்துவம், போக்குவரத்து, விண்வெளி, யோகா மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறிய நகரங்களில் ஸ்டார்ட் அப் புரட்சி முன்னெடுத்துச் செல்கிறது என்று பிரதமர் கூறினார். விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி விவரித்த பிரதமர், விண்வெளி ஓடத்தை செலுத்துவது உட்பட விண்வெளித் துறையில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த மனநிலை மாறி வருவது குறித்து பிரதமர் கருத்து தெரிவித்தார். ஒரு தொழிலைத் தொடங்க நிறையப் பணம் தேவை என்ற மனநிலையை ஸ்டார்ட்அப்கள் மாற்றியுள்ளன என்று அவர் கூறினார். வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாறுவதற்கான பாதையை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டின் இளைஞர்களை அவர் பாராட்டினார்.

12 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கிய 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், தொழில்முனைவோர் தங்கள் காப்புரிமைகளை விரைந்து தாக்கல் செய்வது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார். ஜிஇஎம் இணையதளம் வர்த்தகங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது என்று கூறிய அவர்,  புதிய துறைகளில் நுழையும் இளைஞர்களைப் பாராட்டினார். கொள்கை தளங்களில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்று பிரதமர் கூறினார்.

புதிய தொழில்களுக்கு டிஜிட்டல் இந்தியா அளித்துள்ள உத்வேகத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், இது மிகப் பெரிய உத்வேகம் அளிக்கிறது என்றார். கல்லூரிகள் இதை ஒரு ஆய்வாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். நாட்டில் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஃபின்டெக் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிக்கும் தூணாக யுபிஐ மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஜி20 உச்சி மாநாட்டின் போது பாரத மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சாவடியில் தொழில்துறை மற்றும் உலகத் தலைவர்கள் பெரும் எண்ணிக்கையில் காத்திருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், யுபிஐ செயல்பாடுகள் குறித்து விளக்கியதையும், சோதனை ஓட்டம் நடத்த முன்வந்ததையும் நினைவு கூர்ந்தார். இது நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இடைவெளியைக் குறைத்து, தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். கல்வி, விவசாயம் அல்லது சுகாதாரம் என எதுவாக இருந்தாலும், நாட்டில் 45 சதவீதத்திற்கும் அதிகமான புதிய தொழில்கள் பெண்களால் வழிநடத்தப்படுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம் இயக்கத்திற்கு மட்டுமின்றி, மனிதகுலத்திற்கும் புதுமை கண்டுபிடிப்பு கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். ஸ்டார்ட் அப் – 20 திட்டத்தின் கீழ், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியை அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் கை ஓங்கியிருப்பது குறித்தும் அவர் பேசினார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் வருகையால் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும், உலக முதலீட்டாளர்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய பிரதமர், தேசிய குவாண்டம் இயக்கம், இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் மற்றும் செமிகண்டக்டர் இயக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டார். அமெரிக்க செனட்டில் உரையாற்றியபோது செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதித்ததை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்தத் துறையில் இந்தியா தொடர்ந்து முன்னோடியாக இருக்கும் என்று உறுதியளித்தார். “உலகளாவிய பயன்பாடுகளுக்கான இந்தியாவின் தீர்வுகள், உலகின் பல நாடுகளுக்கு உதவிக்கரமாக மாறும் என்று நான் நம்புகிறேன்என்று பிரதமர் கூறினார்.

ஹேக்கத்தான் கருவிகள் மூலம் இந்திய இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உலகெங்கும் உள்ள விருப்பத்தை பிரதமர் ஒப்புக் கொண்டார். இந்திய நிலைமைகளில் பரிசோதிக்கப்பட்ட தீர்வுகள் உலகளாவிய ஏற்றுக்கொள்ளலைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சூரிய உதயத் துறை பகுதிகளில் எதிர்காலத் தேவைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் திட்டமிடலுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்டார்ட் அப் துறையில் வளரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திருப்பித் தர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். தொழில் காப்பகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர்  கேட்டுக் கொண்டார். ஹேக்கத்தான் மூலம் தீர்வுகளுக்காக  இளைஞர்களை ஈடுபடுத்திய து அனுபவங்களை அவர் விவரித்தார். ஆட்சியில் பல நல்ல தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், தீர்வுகளைக் கண்டறிவதற்கான ஹேக்கத்தான் கலாச்சாரம் அரசில் நிறுவப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வர்த்தகர்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மகா கும்பமேளா செயல் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

11-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்து, இந்தியாவை ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியதில் இளைஞர்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டிய பிரதமர், மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் எனக் குறிப்பிட்டார்.  இளைஞர்களுடன் கலந்துரையாடுவது க்கு புதிய சக்தியை அளிப்பதாகக் கூறியதுடன், எதிர்காலத்திற்கான து நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து தமது உரையை அவர் நிறைவு செய்தார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா படேல், திரு சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

PKV/KRS