Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லி செங்கோட்டையில் தொடங்கியுள்ள “ஒளி – ஒலி” காட்சிக்கு பிரதமர் பாராட்டு


17-ம் நூற்றாண்டு முதல் தற்போதைய வரையிலான நமது  வரலாறு  மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் “ஒளி – ஒலி” காட்சி புதுதில்லியின் செங்கோட்டையில் தொடங்கியுள்ளது. இது குறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், செங்கோட்டையை பார்வையிட கூடுதலாக ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த தகவல்களை நவீன  முறையில் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

***

TV/ES/KPG