Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் நிறுவும் முன், பிரதமர் ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.

புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் நிறுவும் முன், பிரதமர் ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.


நாளை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சிக்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.

 

ஆதீனங்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், அவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு எழுந்தருளி அலங்கரித்தது பெரும்பேறு என்றார். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் தான் சிவபெருமானின் அனைத்து சீடர்களுடனும் ஒரே நேரத்தில் பழக முடிந்தது என்று பிரதமர் கூறினார்.  நாளை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஆதீனங்கள் கலந்து கொண்டு ஆசிகளைப் பொழிவார்கள் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய தேசியத்தின் கோட்டையாக தமிழகம் திகழ்கிறது என்றார். தமிழ் மக்கள் எப்போதும் பாரத அன்னையிடம் சேவை மனப்பான்மையும், நலனும் கொண்டிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல வருடங்களில் தமிழ் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று திரு மோடி வேதனை தெரிவித்தார். இப்போது இந்தப் பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

 

சுதந்திரத்தின் போது, ​​அதிகார பரிமாற்ற சின்னம் தொடர்பான கேள்வி எழுந்ததாகவும், இது தொடர்பாக பல்வேறு மரபுகள் இருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “அந்த நேரத்தில், ஆதீனம் மற்றும் ராஜாஜியின் வழிகாட்டுதலில், நமது புனிதமான பண்டைய தமிழ் கலாச்சாரத்திலிருந்து – செங்கோல் மூலம் அதிகாரத்தை மாற்றுவதற்கான ஆசீர்வதிக்கப்பட்ட பாதையை நாம் கண்டோம்” என்று அவர் கூறினார். செங்கோல், நாட்டின் நலனுக்கான பொறுப்பு தனக்கு உள்ளது என்பதையும், கடமையின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகக் கூடாது என்பதையும் நினைவூட்டுகிறது என்று பிரதமர் கூறினார். அப்போது திருவாவடுதுறை ஆதீனம் 1947ல் சிறப்பு வாய்ந்த செங்கோலை உருவாக்கினார்கள். “இன்று, அந்தக் காலத்தின் படங்கள், தமிழ் கலாச்சாரத்திற்கும், நவீன ஜனநாயக நாடாக இந்தியாவின் மாற்றத்திற்கும் இடையே உள்ள ஆழமான உணர்வுபூர்வமான பிணைப்பை நமக்கு நினைவூட்டுகின்றன. இன்று இந்த ஆழமான பிணைப்பின் கதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து உயிர் பெற்றுள்ளது. ” என்று பிரதமர் கூறினார். இது அந்தக்கால நிகழ்வுகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்தப் புனிதச் சின்னம் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதையும் நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்  என்றார்.

 

ராஜாஜி மற்றும் பிற பல்வேறு ஆதீனங்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் தலைவணங்கினார். செங்கோலில் இருந்து சுதந்திரத்தைத் துவக்கிய அந்தச் செங்கோலை முன்னிலைப்படுத்தினார். நூற்றுக்கணக்கான ஆண்டு அடிமைத்தனத்தின் ஒவ்வொரு சின்னமும் அடிமைத்தனத்திற்கு முன் இருந்த தேசத்தின் சகாப்தத்திற்கு சுதந்திர இந்தியாவை இணைத்தது செங்கோல் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் இது 1947 இல் நாடு சுதந்திரமடைந்தபோது அதிகார மாற்றத்தைக் குறித்தது. செங்கோலின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், அது இந்தியாவின் கடந்த கால பாரம்பரியங்கள் மற்றும் புகழ்பெற்ற ஆண்டுகளை சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்துடன் இணைக்கிறது என்று பிரதமர் கூறினார். புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், பிரயாக்ராஜில் உள்ள ஆனந்த் பவனில் அது வாக்கிங் ஸ்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். ஆனந்த பவனில் இருந்து செங்கோலை வெளியே கொண்டு வந்தது தற்போதைய அரசுதான். இதன் மூலம், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் அமைக்கும் போது, ​​இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் தருணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது என்றார் . “ஜனநாயகக் கோவிலில் செங்கோல் அதற்கு உரிய இடத்தைப் பெறுகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். செங்கோல் கடமைப் பாதையில் தொடர்ந்து நடக்கவும், பொதுமக்களுக்கு பதிலளிக்கவும் நமக்கு நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

ஆதீனத்தின் மகத்தான எழுச்சியூட்டும் பாரம்பரியம் வாழும் பக்தி ஆற்றலின் சின்னம் என்று பிரதமர் கூறினார். அவர்களின் சைவப் பாரம்பரியத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் தத்துவத்தில் உள்ள ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற  உணர்வை பிரதமர் பாராட்டினார். பல ஆதினங்களின் பெயர்கள் இந்த உணர்வை வெளிப்படுத்துகின்றன, ஏனெனில் இந்த புனிதப் பெயர்களில் சில கைலாசத்தைக் குறிக்கின்றன, இது தொலைதூர இமயமலையில் இருந்தாலும் அவர்களின் இதயங்களுக்கு அருகில் உள்ளது. சிவபக்தியைப் பரப்புவதற்காகக் கைலாசத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்படும் பெரிய சைவ துறவி திருமூலர். இதேபோல், உஜ்ஜயினி, கேதார்நாத் மற்றும் கௌரிகுண்ட் போன்றவற்றைப் பயபக்தியுடன் குறிப்பிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல மகான்களை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

 

வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழ்நாட்டில் இருந்து காசிக்குச் சென்று பனாரஸில் உள்ள கேதார்காட்டில் கேதாரேஷ்வர் கோயிலை நிறுவிய தர்மபுரம் ஆதீனத்தின் சுவாமி குமரகுருபரரைப் பற்றி பிரதமர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் திருப்பனந்தாளில் உள்ள காசி மடமும் காசியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், திருப்பனந்தாள் காசி மடம் யாத்ரீகர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கியது, அங்கு ஒருவர் தமிழகத்தின் காசி மடத்தில் பணத்தை செலுத்திவிட்டு காசியில் சான்றிதழைக் காட்டி திரும்பப் பெறலாம். இதன்மூலம், சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் சிவ பக்தியை பரப்பியது மட்டுமின்றி, நம்மை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கும் பணியையும் செய்தனர். ” என்று பிரதமர் கூறினார்.

 

நூற்றுக்கணக்கான ஆண்டு அடிமைத்தனத்திற்குப் பிறகும் தமிழர் கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் ஆதீனம் போன்ற சிறந்த பாரம்பரியத்தின் பங்கை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அதை வளர்த்த சுரண்டப்பட்ட மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களையும் அவர் பாராட்டினார். “உங்கள் அனைத்து நிறுவனங்களும் தேசத்திற்கான பங்களிப்பின் அடிப்படையில் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்த பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இதுவாகும். தலைமுறைகளுக்கு உழைக்க உத்வேகம் பெறுவதற்கான நேரம் இது” என்று பிரதமர் கூறினார்.

 

அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதற்குள் வலிமையான, தன்னம்பிக்கை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என்று கூறினார். 2047ஆம் ஆண்டின் இலக்குகளை நோக்கி நாடு முன்னேறும் போது, ​​ஆதீனங்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்று பிரதமர் வலியுறுத்தினார். 1947ஆம் ஆண்டு லட்சக்கணக்கான நாட்டு மக்கள் ஆதீனத்தின் பங்கைப் பற்றி மீண்டும் அறிந்துள்ளனர். “உங்கள் அமைப்புகள் எப்போதும் சேவையின் விழுமியங்களை உள்ளடக்கி உள்ளன. மக்களை ஒருவரோடு ஒருவர் இணைப்பதற்கும், அவர்களிடையே சமத்துவ உணர்வை உருவாக்குவதற்கும் சிறந்த உதாரணத்தை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

 

 பிரதமர், இந்தியாவின் பலம் அதன் ஒற்றுமையில் தங்கியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடைகளை உருவாக்குபவர்கள் மற்றும் பல்வேறு சவால்களை முன்வைப்பவர்கள் குறித்து அவர் எச்சரித்தார். “இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள், நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால், உங்கள் நிறுவனங்களால் நாடு பெறும் ஆன்மீகம் மற்றும் சமூக வலிமையுடன் ஒவ்வொரு சவாலையும் நாம் எதிர்கொள்வோம்” என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

***

AD/CJL/DL