Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தொடக்க மற்றும் வரலாற்று அமர்வு ஆகும். மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

இன்று புதிய அவையின் முதல் அமர்வில் முதலில் பேச எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இந்த சந்தர்ப்பம் பல வழிகளில் முன்னெப்போதும் இல்லாதது. இது சுதந்திரத்தின் மிர்த காலத்தின்விடியலாகும், இந்த புதிய கட்டிடத்தில் புதிய தீர்மானங்கள் மற்றும் தனது எதிர்காலத்தை வடிவமைத்து இந்தியா முன்னேறி வருகிறது. அறிவியல் உலகில் சந்திரயான்-3 இன் மகத்தான வெற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமிதத்தை நிரப்புகிறது. பாரதத்தின் தலைமையின் கீழ் ஜி20 ஐ அசாதாரணமாக நடத்துவது உலக அரங்கில் விரும்பிய செல்வாக்கைக் கொண்டுவரும் ஒரு வாய்ப்பாகும்..

சுதந்திரத்தின் அம்ரித் காலத்தில் புதிய தீர்மானங்களுடன் நாம் முன்னேறும்போது, குறிப்பாக விநாயகர் சதுர்த்தியின் போது லோக்மான்ய திலகரை நினைவுகூருவது இயல்பானது. சுதந்திரப் போராட்டத்தின் போது, நாடு முழுவதும் சுயாட்சி உணர்வைத் தட்டி எழுப்புவதற்கான ஒரு வழிமுறையாக லோகமான்ய திலகர் அவர்கள் விநாயகர் விழாவை நிறுவினார். லோகமான்ய திலகர் அவர்கள் விநாயகர் திருவிழாவில் சுதந்திர பாரதம் என்ற கருத்தை புகுத்தினார், இன்று, விநாயகர் சதுர்த்தி, அவரது உத்வேகத்துடன் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இத்தருணத்தில் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

நாட்டின் முதல் பிரதமரான பண்டித நேருவால் முதன்முதலில் வரவேற்கப்பட்ட புனிதமான செங்கோல் இதுவாகும். இந்த செங்கோல் மூலம், பண்டித நேரு இந்த சடங்கைச் செய்து சுதந்திரக் கொண்டாட்டத்தைத் தொடங்கினார். எனவே, இந்த மிக முக்கியமான கடந்த காலம் இந்த செங்கோலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மகத்தான பாரம்பரியத்தின் அடையாளமாகவும், தேசத்தின் ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது. பண்டித நேருவின் கரங்களை அலங்கரித்த செங்கோல் இன்று மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. இதைவிடப் பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும்?

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கம்பீரம் நவீன பாரதத்தின் பெருமையையும் குறிக்கிறது. நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதில் தங்கள் வியர்வையை சிந்தியுள்ளனர், மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும், அவர்கள் ஓய்வின்றி உழைத்தனர். கட்டுமானம் நடந்து கொண்டிருந்தபோது, இந்த தொழிலாளர்களை, குறிப்பாக அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்க எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற சவாலான காலகட்டத்திலும், அவர்கள் இந்த மகத்தான கனவை நிறைவேற்றினர். இன்று, நாம் அனைவரும் அந்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர்களின் பங்களிப்பு வரும் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். இந்த அற்புதமான கட்டமைப்பை உருவாக்க 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அயராது உழைத்துள்ளனர் மற்றும் வியர்வை சிந்தியுள்ளனர், மேலும் இது வரும் பல தலைமுறைகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அந்தத் தொழிலாளர்களுக்கு எனது மரியாதையை செலுத்தும் அதே வேளையில், ஒரு புதிய பாரம்பரியம் தொடங்கியுள்ளது என்பதையும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அவையில் ஒரு டிஜிட்டல் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் புத்தகத்தில் அந்த தொழிலாளர்களின் முழு சுயவிவரங்களும் உள்ளன, இதனால் எதிர்கால சந்ததியினர் பாரதத்தின் எந்த பகுதியிலிருந்து எந்த தொழிலாளி வந்தார்கள் என்பதையும், அவர்களின் வியர்வை இந்த அற்புதமான கட்டமைப்பிற்கு எவ்வாறு பங்களித்தது என்பதையும் அறிந்து கொள்வார்கள். இது ஒரு புதிய தொடக்கம், ஒரு மங்களகரமான தொடக்கம் மற்றும் நம் அனைவருக்கும் ஒரு பெருமையான தருணம். இந்த சந்தர்ப்பத்தில், 1.4 பில்லியன் குடிமக்களின் சார்பிலும், ஜனநாயகத்தின் மகத்தான பாரம்பரியத்தின் சார்பிலும் இந்த தொழிலாளர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தேர்தல்கள் இன்னும் வெகுதூரத்தில் உள்ளன, இந்த நாடாளுமன்றத்தில் நமக்கு எஞ்சியுள்ள நேரம் எங்கள் நடத்தைக்கு ஏற்ப ஆளுங்கட்சி வரிசைகளிலும் எதிர்க்கட்சி வரிசைகளிலும் அமர யாருக்கு உரிமை உண்டு என்பதை தீர்மானிக்கும். ஆளுங்கட்சி வரிசையில் யார் அமர வேண்டும், எதிர்க்கட்சி வரிசையில் யார் அமர வேண்டும் என்பதை நடத்தை தீர்மானிக்கும்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

ஜனநாயகத்தில், அரசியல், கொள்கைகள் மற்றும் அதிகாரம் ஆகியவை சமூகத்தில் பயனுள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முக்கிய வழிமுறைகளாகும். விண்வெளி, விளையாட்டு, புத்தொழில், சுய உதவிக் குழுக்கள் என அனைத்துத் துறைகளிலும் இந்தியப் பெண்களின் வலிமையை உலகம் பார்த்து வருகிறது. ஜி-20 மாநாடும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த விவாதமும் உலகளவில் வரவேற்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினால் மட்டும் போதாது என்பதை உலகம் ஒப்புக் கொள்கிறது. மனித வளர்ச்சிப் பயணத்தில் புதிய மைல்கற்களை அடையவும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய இலக்குகளை அடையவும் நாம் விரும்பினால், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நாம் தழுவுவது அவசியம். ஜி-20 அமைப்பில் இந்தியாவின் கண்ணோட்டத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மகளிர் மேம்பாட்டிற்கான எங்கள் திட்டங்கள் ஒவ்வொன்றும் மகளிரின் தலைமையை நோக்கி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நிதி சேர்க்கையை மனதில் கொண்டு, நாங்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டத்தை தொடங்கினோம், மேலும் 50 கோடி பேரில் அதிகபட்ச பயனாளிகளில் பெண்கள் கணக்கு வைத்திருப்பவர்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் தன்னைப் பற்றிய ஒரு புதிய நம்பிக்கை. முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டபோது, 10 லட்சம் ரூபாய் வரை எந்த வங்கி உத்தரவாதமும் இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டன, மேலும் பயனாளிகளில் பெரும்பாலோர் பெண்கள் என்பதில் நாடு பெருமை கொள்ளலாம். நாடு முழுவதும் பெண் தொழில்முனைவோர்களின் செழிப்பான சூழல் காணப்பட்டது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பெண்களின் சொத்து ஆவணங்கள் அதிகபட்சம் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சொத்து உரிமையாளர்களாக மாற்றப்பட்டனர்.

இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற உதவிய இரு அவைகளின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய அவையின் முதல் அமர்வில் எனது உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி.

மறுப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. இந்தியில் உரை நிகழ்த்தப்பட்டது.

***

ANU/AD/IR/KPG/KV