பிரதமர் திரு.நரேந்திர மோடி புதிய தொழில்முனைவோருடன் இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற ஆறு மையப்பொருள்கள் குறித்து தொழில்முனைவோர் பிரதமர் முன்னிலையில் விளக்கங்கள் அளித்தனர்.
இந்த விளக்கமளித்தலுக்கு ஏதுவாக 150க்கும் அதிகமான தொழில்முனைவோர் ஆறு பணிக்குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு மையப்பொருளுக்கும் இரண்டு தொழில்முனைவோர் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பிட்ட மையப்பொருளுக்கான தெரிவு செய்யப்பட்ட புதிய தொழில் முனைவோர் அனைவர் சார்பிலும் அவர்கள் பேசினார்.
புதிய தொழில்களின் பிரதிநிதிகள் தங்கள் உரையின் போது, தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ள இத்தகைய மேடையை வழங்கிய வாய்ப்புக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். புதிய தொழில் சூழலுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் அவரது தொலைநோக்கு பார்வைக்காகவும் பாராட்டு தெரிவித்தனர். வேளாண்மையில் பெருமளவிலான தரவுகள் சேகரிப்பு நடைமுறை , தெரிவு செய்யப்பட்ட வேளாண் வணிக மையத்தை இந்தியாவில் உருவாக்குதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன்மூலம் சுகாதார கவனிப்பை ஊக்குவித்தல், மனநல பிரெச்சனைகளை கையாளுதல், மெய்நிகர் சுற்றுலாக்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சுற்றுலாவையும் பயணத்தையும் மேம்படுத்துதல், கல்வி தொழில் நுட்பம் மற்றும் வேலை கண்டறிதல் , விண்வெளித்துறை, இணையம் இல்லாத சில்லரை வர்த்தகத்தை டிஜிட்டல் வர்த்தகத்துடன் இணைத்தல், பொருள் உற்பத்தி திறனை அதிகரித்தல், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிகள், நீடிக்கவல்ல பசுமை பொருட்களை அதிகப் படுத்துதல், நீடித்த முறையிலான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் பல்வேறு பிரிவுகளிலும் அவர்கள் கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல் ,டாக்டர் மன்சுக் மாண்டவியா ,திரு அஸ்வினி வைஷ்ணவ் ,திரு சர்பானந்த சோனாவால் ,திரு புருஷோத்தம் ரூபாலா ,திரு ஜி கிஷன் ரெட்டி ,திரு பசுபதி குமார் பரஸ் ,டாக்டர் ஜிதேந்திர சிங் ,திரு ஸோம் பர்காஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விளக்க உரைகளுக்கு பின் பேசிய பிரதமர் , இந்திய சுதந்திரம் நூற்றாண்டை அடையும் போது புதிய தொழில்களின் பங்களி ப் பு முக்கியமானதாக இருக்குமென்பதால் சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவை கொண்டாடும் இந்த ஆண்டில் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய தொழில்கள் இந்தியா புதிய கண்டு பிடிப்புகள் வாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும் என்றார் .
“நாட்டின் அனைத்து புதிய தொழில்களையும் புதியன கண்டுபிடிக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவர்கள் தான் உலகின் புதிய தொழில்களில் இந்தியாவின் கொடியை ஏற்றுகிறார்கள். இந்த கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் செல்வதற்காக ஜனவரி 16-ஐ தேசிய புதிய தொழில்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பிரதமர் அறிவித்தார்
இந்தப் பத்தாண்டு இந்தியாவின் தொழில் நுட்ப தசாப்தம் என்ற கோட்பாட்டை நினைவுகூர்ந்த பிரதமர் புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்முனைவோரையும் புதிய தொழில்கள் சூழலையும் வலுப்படுத்த இந்தப் புத்தாண்டில் அரசு செய்திருக்கும் மாபெரும் மாற்றங்களின் மூன்று முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார். முதலாவதாக அரசு நடைமுறை மற்றும் அதிகார வர்க்கத்தின் வலையிலிருந்து புதிய தொழில் முனைவோர்களையும் புதிய கண்டு பிடிப்பாளர்களையும் விடுவிப்பது; இரண்டு ,புதிய கண்டுபிடிப்பை மேம்படுத்த நிறுவனமயமான நடைமுறையை உருவாக்குவது; மூன்றாவதாக இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இளம் தொழில் முனைவோர்களுக்கும் உதவி செய்தல். இந்த முயற்சிகளின் பகுதியாக தொடங்குக இந்தியா நிமிர்ந்து நில் இந்தியா போன்ற திட்டங்களை அவர் பட்டியிலிட்டார். கூடுதல் வரி பிரச்சனையை நீக்குதல், வரி விதிப்பு முறைகளை எளிமையாக்குதல், அரசு நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தல், 9 தொழிலாளர் மற்றும் 3 சுற்றுச்சூழல் விதிகளுக்கு சுயசான்றிதழ் அளிக்க அனுமதித்தல், 25 ஆயிரத்திற்கும் அதிகமான வரிமுறைகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுப்பது அதிகரிக்கும். அரசு இ சந்தையின் புதிய தொழில் நிறுவனங்கள் அரசுக்கு சேவைகள் வழங்க வசதி செய்யப்படும்.
குழந்தை பருவத்திலிருந்தே மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புக்கான ஈர்ப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் கண்டுபிடிப்பை அரசின் முயற்சி நிறுவனமயமாக்கும் என்று பிரதமர் கூறினார். 9000- க்கும் அதிகமான அடல் தொழிற் சோதனைக் கூடங்கள் பள்ளிகளின் கண்டு பிடிப்பு வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகின்றன. புதிய யோசனைகளுடன் செயல்படவைக்கின்றன. புதிய ட்ரோன் விதிகளாகட்டும் அல்லது புதிய விண்வெளி கொள்கையாகட்டும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு இளைஞர்களுக்கு வழங்க அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார் அறிவுசார் சொத்துரிமைகள் பதிவு தெடர்பான விதிகளையும் கூட நமது அரசு எளிமைப்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார்.
புதிய கண்டு பிடிப்புகளுக்கான அறிகுறிகள் ஏராளமான அளவு உயர்ந்திருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 2013-14-ல் 4000 காப்புரிமைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டன; கடந்த ஆண்டு 28000 க்கும் அதிகமான காப்புரிமைகள் அனுமதிக்கபட்டுள்ளன. 2013-14-ல் 70000 வர்த்தக குறியீடுகள் பதிவு செய்யப்பட்டன; 2020-21-ல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தக குறியீடுகள் பதிவு செய்யப்பட்டன. 2013-14-ல் 4000 பதிப்புரிமைகள் மட்டுமே அளிக்கப்பட்டன; கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 16000-ஐ கடந்தது. புதிய கண்டுபிடிப்பிற்கான இந்திய இயக்கத்தின் விளைவாக உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் இந்தியா முன்னேறி உள்ளது. ஏற்கனவே 81 புள்ளிகளில் இருந்த இந்தியா தற்போது 46வது இடத்திற்கு வந்துள்ளது
இந்தியாவின் புதிய தொழில்கள் 55 தனி தொழில்களாக செயற்பட்டு வருகின்றன என்று தெரிவித்த திரு மோடி, 5 ஆண்டுகளுக்கு முன் 500க்கும் குறைவாக இருந்த இந்திய தொழில்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று 60000க்கும் அதிகமாக உள்ளது. “நமது புதிய தொழில்கள் போட்டியின் விதிகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன அதனால் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக புதிய தொழில்கள் இருக்கப்போவதாக நான் நம்புகிறேன்” என்று பிரதமர் கூறினார். “கடந்த ஆண்டு நாட்டில் 42 அதிக முதலீட்டு புதிய தொழில்கள் வந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனங்கள் இந்தியாவின் தற்சார்பு , தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இந்த நூற்றாண்டின் அதிக முதலீட்டு புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதை நோக்கி இந்தியா இன்று துரிதமாக செல்கிறது இந்தியாவின் புதிய தொழில்களின் பொற்காலம் இப்போது தொடங்கிருப்பதாக நான் நம்புகிறேன் ” என்று அவர் மேலும் கூறினார்.
வளர்ச்சியின் பிரச்சனைகள், பிராந்திய பாலின பாகுபாடு பிரச்சனைகளை புதிய தொழில்கள் தீர்வு காண்பதால் அவற்றின் அதிகாரம ளி த்தல் பங்கினை பிரதமர் கோடிட்டுகாட்டினார். தற்போது நாட்டின் 625 மாவட்டங்க ளி ல் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஒரு புதிய தொழிலாவது உள்ளது என்று குறிப்பிட்ட அவர் பாதிக்கும் அதிகமான புதிய தொழில்கள் இரண்டாம் நிலை ,மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவி த் தார். இதனால் சாதாரண ஏழைக் குடும்பத்தினர் வர்த்தகர்களாக மாற்றப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான இளம் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தியாவின் பன்முகத்தன்மை முக்கிய பலமாக இருக்கிறது என்றும் இந்தியாவின் உலகளாவிய அடையாளத்திற்கு முக்கியமானதாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்தியாவின் அதிக முதலீடு கொண்ட தொழில்களும் புதிய தொழில்களும் இந்த பன்முக தன்மையின் செய்திகளாகும் என்று அவர் கூறினார். இந்தியாவை சேர்ந்த புதிய தொழில்கள் எளிதாக உலகின் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியும் என்றும் பிரதமர் கூறினார். எனவே “உங்கள் கனவுகளை உள்ளூருக்கு உரியதாக வைத்திருக்காமல் அவற்றை உலகுக்கானதாக மாற்றுங்கள் இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள் -இந்தியாவுக்காக புதியன கண்டு பிடிப்போம், இந்தியாவிலிருந்து புதியன கண்டுபிடிப்போம்” என்று புதிய கண்டுபிடிப்பாளர்களை அவர் வலியுறுத்தினார்.
பல துறைகளின் புதிய தொழில் சூழல் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். தேசிய பெருந்திட்டமான பிரதமரின் விரைவு சக்தியில் உள்ள கூடுதல் இடத்தை மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் அடிப்படை கட்டமைப்புக்கு பயன்படுத்த முடியும். இதேபோல் பாதுகாப்பு தளவாட உற்பத்தி சிப் உற்பத்தி போன்ற பிரிவுகள் பல வாய்ப்புகளை வழங்கும். புதிய ட்ரோன் கொள்கைக்கு பின் பல முதலீட்டாளர்கள் ட்ரோன் தொழிலில் முதலீடு செய்வதாக அவர் கூறினார். ட்ரோன் தயாரிக்கும் புதிய தொழில்களுக்கு ராணுவம், கப்பற்படை விமானப்படை ஆகியவை 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை வழங்கியுள்ளன. நகர்ப்புற திட்டமிடலில் ‘ வேலைக்கு நடந்து செல்லும்’ கோட்பாடுகள் , ஒருங்கிணைந்த தொழிற் பேட்டைகள், பொலிவுறு போக்குவரத்து போன்றவை ஆற்றல் மிக்க பகுதிகள் என்பதையும் பிரதமர் தொட்டுக்காட்டினார்.
இன்றைய இளைஞர்கள் தங்கள் குடும்பங்களின் வளத்திற்கும் தேசத்தின் தற்சார்புக்கும் திருப்புமுனையாக இருக்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். ‘கிராம பொருளாதாரத்திலிருந்து தொழில் துறை 4.0 வரை இரண்டுமே நமது தேவைகள். நமது வளங்கள் எல்லையற்றவை. ஆராய்ச்சியில் முதலீடும் எதிர்கால தொழில் நுட்பம் தொடர்பான வளர்ச்சியும் அரசின் இன்றைய முன்னுரிமை’ என்று அவர் கூறினார்
எதிர்கால கண்ணோட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் தற்போதைய நிலையில் மக்கள் தொகையில் பாதி பேர் மட்டுமே இணையத்தில் இருக்கிறார்கள். எனவே எதிர்கால வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்றார். இதனால் புதிய தொழில் முனைவோர் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் என்ற அவர் வேண்டுகோள் விடுத்தார். “செல்பேசி இணையதளமாக இருந்தாலும், அகண்ட அலைவரிசை தொடர்பு அல்லது சாதனங்கள் வழியிலான தொடர்பு, அதிகரித்துவரும் கிராமங்களின் விருப்பங்கள் சிறு நகர பகுதிகள் விரிவாக்கத்தின் புதிய அலைக்காக காத்திருக்கின்றன ” என்று அவர் கூறினார்.
புதிய கண்டுபிடிப்பின் புதிய சகாப்தம் ,அதாவது கொள்கைகள் ,தொழில் துறை மற்றும் முதலீடு அவற்றின் தொழிலாளர்கள் ,நிறுவனம் ,சொத்து உருவாக்கம், வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவை இந்தியாவுக்காக இருக்கவேண்டுமென்று புதிய தொழில் முனைவோரிடம் பிரதமர் கூறினார் “நான் உங்களோடு நிற்கிறேன், அரசு உங்களோடு இருக்கிறது, ஒட்டுமொத்த நாடும் உங்களோடு நிற்கிறது” என்று உரையை நிறைவுசெய்தார் .
****
Interacting with youngsters from the world of start-ups. https://t.co/bXTw7rSPiH
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
देश के उन सभी स्टार्ट-अप्स को, सभी इनोवेटिव युवाओं को बहुत-बहुत बधाई देता हूं, जो स्टार्ट-अप्स की दुनिया में भारत का झंडा बुलंद कर रहे हैं।
— PMO India (@PMOIndia) January 15, 2022
स्टार्ट-अप्स का ये कल्चर देश के दूर-दराज तक पहुंचे, इसके लिए 16 जनवरी को अब नेशनल स्टार्ट अप डे के रूप में मनाने का फैसला किया गया है: PM
इस दशक को भारत का techade कहा जा रहा है।
— PMO India (@PMOIndia) January 15, 2022
इस दशक में Innovation, entrepreneurship और start-up इकोसिस्टम को मजबूत करने के लिए सरकार जो बड़े पैमाने पर बदलाव कर रही है, उसके तीन अहम पहलू हैं: PM @narendramodi
पहला, Entrepreneurship को, इनोवेशन को सरकारी प्रक्रियाओं के जाल से, bureaucratic silos से मुक्त कराना।
— PMO India (@PMOIndia) January 15, 2022
दूसरा, इनोवेशन को प्रमोट करने के लिए institutional mechanism का निर्माण करना।
और तीसरा, युवा innovators, युवा उद्यम की handholding करना: PM @narendramodi
हमारा प्रयास, देश में बचपन से ही Students में innovation के प्रति आकर्षण पैदा करने, innovation को institutionalise करने का है।
— PMO India (@PMOIndia) January 15, 2022
9 हजार से ज्यादा अटल टिंकरिंग लैब्स, आज बच्चों को स्कूलों में innovate करने, नए Ideas पर काम करने का मौका दे रही हैं: PM @narendramodi
चाहे नए drone rules हों, या फिर नई space policy, सरकार की प्राथमिकता, ज्यादा से ज्यादा युवाओं को innovation का मौका देने की है।
— PMO India (@PMOIndia) January 15, 2022
हमारी सरकार ने IPR registration से जुड़े जो नियम होते थे, उन्हें भी काफी सरल कर दिया है: PM @narendramodi
वर्ष 2013-14 में जहां 4 हजार patents को स्वीकृति मिली थी, वहीं पिछले वर्ष 28 हजार से ज्यादा patents, ग्रांट किए गए हैं।
— PMO India (@PMOIndia) January 15, 2022
वर्ष 2013-14 में जहां करीब 70 हजार trademarks रजिस्टर हुए थे, वहीं 2020-21 में ढाई लाख से ज्यादा trademarks रजिस्टर किए गए हैं: PM @narendramodi
वर्ष 2013-14 में जहां सिर्फ 4 हजार copyrights, ग्रांट किए गए थे, पिछले साल इनकी संख्या बढ़कर 16 हजार के भी पार हो गई है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 15, 2022
Innovation को लेकर भारत में जो अभियान चल रहा है, उसी का प्रभाव है कि Global Innovation Index में भी भारत की रैंकिंग में बहुत सुधार आया है।
— PMO India (@PMOIndia) January 15, 2022
वर्ष 2015 में इस रैंकिंग में भारत 81 नंबर पर था। अब इनोवेशन इंडेक्स में भारत 46 नंबर पर है: PM @narendramodi
Our Start-ups are changing the rules of the game.
— PMO India (@PMOIndia) January 15, 2022
इसलिए मैं मानता हूं- Start-ups are going to be the backbone of new India: PM @narendramodi
बीते साल तो 42 यूनिकॉर्न देश में बने हैं।
— PMO India (@PMOIndia) January 15, 2022
हज़ारों करोड़ रुपए की ये कंपनियां आत्मनिर्भर होते, आत्मविश्वासी भारत की पहचान हैं।
आज भारत तेज़ी से यूनिकॉर्न की सेंचुरी लगाने की तरफ बढ़ रहा है।
और मैं मानता हूं, भारत के स्टार्ट-अप्स का स्वर्णिम काल तो अब शुरु हो रहा है: PM
भारत के स्टार्ट-अप्स खुद को आसानी से दुनिया के दूसरे देशों तक पहुंचा सकते हैं।
— PMO India (@PMOIndia) January 15, 2022
इसलिए आप अपने सपनों को सिर्फ local ना रखें global बनाएं।
इस मंत्र को याद रखिए- let's Innovate for India, innovate from India: PM @narendramodi
Millennial आज अपने परिवारों की समृद्धि और राष्ट्र की आत्मनिर्भरता, दोनों के आधार हैं।
— PMO India (@PMOIndia) January 15, 2022
Rural economy से लेकर Industry 4.0 तक हमारी ज़रूरतें और हमारा potential, दोनों असीमित हैं।
Future technology से जुड़ी रिसर्च और डेवलपमेंट पर इन्वेस्टमेंट आज सरकार की प्राथमिकता है: PM
ये innovation यानि ideas, industry and investment का नया दौर है।
— PMO India (@PMOIndia) January 15, 2022
आपका श्रम भारत के लिए है।
आपका उद्यम भारत के लिए है।
आपकी wealth creation भारत के लिए है, Job Creation भारत के लिए है: PM @narendramodi
This is India’s Techade.
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
Our focus is on innovation, enterprise and StartUps.
It includes reducing silos, institutionalising innovation and assisting innovators. pic.twitter.com/hn8lpvC3Lt
You would find it interesting to know how India is institutionalising innovation. pic.twitter.com/iLwO1xtU0R
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
India’s StartUps are changing the rules of the game.
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
They are the economic backbone of New India. pic.twitter.com/B4gD2zHSpF
Innovate for India and innovate from India. pic.twitter.com/T6HUkE1ilQ
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
A request to the world of StartUps. pic.twitter.com/R7UlfMsCVd
— Narendra Modi (@narendramodi) January 15, 2022