Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் , இந்திய மக்கள் இணையற்ற சாம்பியன்கள்: பிரதமர்


பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய மக்கள் புதுமையை ஏற்றுக்கொள்ளும் பாங்கையும் சிறப்பான தகவமைப்பு திறனையும் பாராட்டியுள்ளார்.  வரும் காலங்களிலும்  இந்த உத்வேகத்தைத் தொடரும் உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்த ஒருவரது  ட்வீட்டருக்கு பதிலளித்து  பிரதமர் கூறியிருப்பதாவது:

“சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்திய மக்கள் இணையற்ற  சாம்பியன்கள்! அவர்கள் புதுமையை ஏற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், அதற்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும்  திறனையும் கொண்டவர்கள். இந்த மாற்றம் இந்தியா முழுவதும் கண்கூடாக தெரிகிறது.  வரும் காலங்களில் இந்த உத்வேகத்தை நாங்கள் தொடருவோம்.”

***

SM/PKV/DL