Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதிய இந்தியாவின் சக்தியால் ஆட்சி அமைப்பு முறையை நிரப்புங்கள்; இளைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பிரதமர்

புதிய இந்தியாவின் சக்தியால் ஆட்சி அமைப்பு முறையை நிரப்புங்கள்; இளைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பிரதமர்


மாற்றத்திற்கு எதிரான மனநிலையை புறக்கணித்து புதிய இந்தியா என்ற சக்தியால் இந்தியாவின் ஆட்சி அமைப்பு முறையை நிரப்புங்கள் என்று இளைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

புது தில்லியில் நடைபெற்ற உதவி செயலர்களின் (2015 தொகுப்பின் இந்திய ஆட்சிப் பணி அலுவர்கள்) துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா தான் அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை இன்னும் அடையவில்லை என்றார். இந்தியாவிற்கு பிறகு சுதந்திரம் அடைந்த நாடுகள், இந்தியாவைவிட மிகப்பெரிய அளவில் வளத்தட்டுப்பாட்டை சந்தித்த நாடுகள் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைந்துள்ளன. மாற்றத்தை கொண்டுவர துணிச்சல் தேவை. பிளவுபட்டுள்ள நிர்வாக ஏற்பாடு அலுவலர்களின் மொத்த பொறுப்புகளை உகந்த அளவிற்கு செயல்பட விடுவதில்லை. அமைப்பை மாற்றி அமைக்க ஆற்றல் மிகுந்த கரங்கள் தேவை என்று பிரதமர் கூறினார்.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும், உதவி செயலர்களுக்கான மூன்று மாத நிகழ்ச்சி பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அலுவலர்கள் அடுத்த மூன்று மாதம், மத்திய அரசின் மூத்த அலுவலர்களுடன் உரையாற்ற வேண்டும். இதனால், அமைப்பிற்கு தேவையான சக்தியும் புதிய எண்ணங்களும் கிடைக்கும். செயலர் அளவில் உள்ள அலுவலர்களின் அனுபவமும் இவர்களுக்கு கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகள் வரும் வரை தங்களின் வாழ்க்கை எப்படி இருந்தது, சந்தித்த சவால்கள் என்பதை இளைய அதிகாரிகள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். அவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சி அமைப்பிலும் பொது மக்களின் வாழ்கையிலும் நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***