Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புகழ்பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி திரு பிகாஷ் சின்ஹா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற அணு இயற்பியலாளர் திரு. பிகாஷ் சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“திரு பிகாஷ் சின்ஹா ஜி அறிவியலுக்கு, குறிப்பாக அணு இயற்பியல் மற்றும் உயர் ஆற்றல் இயற்பியல் துறையில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். ஒரு துடிப்பான ஆராய்ச்சி சூழலை மேம்படுத்துவதில் அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

**************  

ANU/AD/PKV/KRS