Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


 

பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பீகாரின் வளமான பாரம்பரியம், இந்திய வரலாற்றில் அதன் பங்களிப்பு, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பீகார் மக்களின் வலுவான உணர்வு ஆகியவற்றை திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“வீரர்கள், மாபெரும் ஆளுமைகள் உள்ளிட்டவர்களின் புனித பூமியான பீகாரின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் பீகார் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். இந்திய வரலாற்றை பெருமைப்படுத்திய இந்த மாநிலம், தனது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு முக்கியமான கட்டத்தை இன்று கடந்து செல்கிறது. வளர்ச்சியில் பீகார் மக்களின் கடின உழைப்பும், திறமையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் முக்கிய மையமாக விளங்கும் இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். ”

***

PLM/KV