Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரில் ரூ,33,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார், கிழக்கு இந்தியா மற்றும் பீகாரின் வளர்ச்சி & முன்னுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பீகாரில் ரூ,33,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார், கிழக்கு இந்தியா மற்றும் பீகாரின் வளர்ச்சி & முன்னுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பீகாரில் ரூ,33,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார், கிழக்கு இந்தியா மற்றும் பீகாரின் வளர்ச்சி & முன்னுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பீகாரில் ரூ,33,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார், கிழக்கு இந்தியா மற்றும் பீகாரின் வளர்ச்சி & முன்னுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.


பீகாரில் அடிப்படை கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவை திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் ரூ.33,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி, பரானியில் இன்று தொடங்கிவைத்தார். பீகார் ஆளுநர் திரு. லால்ஜி தாண்டன், முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் திரு சுஷில் மோடி, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புதிய திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர், பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினார்.

ரூ.13,365 கோடி மதிப்பீட்டிலான பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் டிஜிட்டல் முறையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம், தானாப்பூர் முதல் மித்தாப்பூர் வரையிலும், பாட்னா ரயில் நிலையம் முதல் புதிய வெளி மாநில பேருந்து நிலையம் வரையிலும் என, இரண்டு வழித்தடங்களில் ஐந்து ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, பாட்னா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

ஜக்தீஷ்பூர் – வாரணாசி இயற்கை எரிவாயுக் குழாய் திட்டத்தில், பூல்பூர் முதல் பாட்னா வரையிலான திட்டத்தை இந்த நிகழ்ச்சியில் பிரதமர் தொடங்கிவைத்தார். தம்மால் அடிக்கல் நாட்டப்படும் திட்டப் பணிகளை தாமே தொடங்கிவைக்க வேண்டும் என்ற தமது தொலைநோக்கு சிந்தனைக்கு இந்த நிகழ்ச்சி மற்றொரு உதாரணம் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 2015 ஜூலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். “உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட பரானி உரத் தொழிற்சாலைக்கான எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதோடு, பாட்னாவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதன் தொடக்கமாகவும் இந்தத் திட்டம் அமையும். எரிவாயு அடிப்படையிலான சுற்றுச்சூழல், இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்திற்கான முன்னுரிமை பணிகளை பட்டியலிட்ட பிரதமர், “கிழக்கு இந்தியா மற்றும் பீகாரில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது” என்று தெரிவித்தார். பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின்கீழ், வாரணாசி, புவனேஷ்வர், கட்டாக், பாட்னா, ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்கள் எரிவாயுக் குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பாட்னா நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான பாட்னா நகர எரிவாயு விநியோகத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
இதுபோன்ற திட்டங்கள் பாட்னா நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, பாட்னா நகரிலும் சுற்றுவட்டாரத்திலும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்யும்.

ஏழைகளை மேம்படுத்த தாம் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைப் பொறுத்தவரை, வளர்ச்சிக்கான தொலைநோக்கு என்பது, கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளுக்குக்கூட போராடி வரும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டது” என்றும் தெரிவித்தார்.

பீகாரில் சுகாதார சேவை விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அவர், “பீகாரின் சுகாதார சேவை கட்டமைப்பு வளர்ச்சியில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சாப்ரா மற்றும் பூர்னியாவில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமையவிருப்பதுடன், கயா மற்றும் பாகல்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரிகளும் மேம்படுத்தப்படுகின்றன. பாட்னாவில் எயிம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில மக்களின் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றொரு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

நதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டத்தையும் பாட்னாவில் பிரதமர் தொடங்கிவைத்தார். 96.54 கிலோமீட்டர் தொலைவிற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பர், சுல்தான்கஞ்ச் மற்றும் நவ்காச்சியா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.

பல்வேறு இடங்களில் 22 அம்ருத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டில் வேதனை, கோபம் மற்றும் துயரம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், “உங்களிடம் காணப்படும் அதே கனல், தமது இதயத்திலும் கணன்று கொண்டிருக்கிறது” என்றார். நாட்டிற்காக உயிர் நீத்த பாட்னாவைச் சேர்ந்த காவலர் சஞ்சய் குமார், பாகல்பூரைச் சேர்ந்த ரத்தன் குமார் தாக்கூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இந்த துயரமான தருணத்தில் உயிர்நீத்த வீர்ர்களின் குடும்பத்தினருக்கு நாடே உறுதுணையாக இருக்கும் என்றார்.

ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பரானி சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். துர்காபூரிலிருந்து முஸாஃபர்பூர் மற்றும் பாட்னாவிற்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான, பாரதீப் – ஹால்டியா – துர்காபூர் சமையல் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பரானி சுத்திகரிப்பு ஆலையில் ATF ஹைட்ரோ சுத்திகரிப்பு பிரிவை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் பரானி நகரிலும், அந்த வட்டாரத்திலும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்யும்.

பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, பரானியில் அமோனியா – யூரியா உரத் தொழிற்சாலை வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இது உர உற்பத்தியை அதிகரிக்கும்.

கீழ்கண்ட மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார்: பரானி – குமேத்பூர், முஸாஃபர்பூர் – ராக்ஸால், ஃபத்வா – இஸ்லாம்பூர், பீகார்ஷரிஃப் – தனியாவன். ராஞ்சி-பாட்னா குளிர்சாதன வசதி கொண்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இந்த நிகழ்ச்சியின் போது தொடங்கிவைக்கப்பட்டது.

பரானி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டமாக ஜார்கண்ட் சென்ற பிரதமர், அங்குள்ள ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி நகரங்களுக்கு செல்கிறார்.

ஹசாரிபாக், தும்கா மற்றும் பலமாவோ ஆகிய இடங்களில் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
*****