Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்டவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு 4-ஜி அலைக்கற்றைகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அலைக்கற்றைக்கான முதலீடாக ரூ.20,140 கோடி மற்றும்  அதற்கான ஜிஎஸ்டி தொகை ரூ. 3,674 கோடியை அரசே ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த நிறுவனங்கள் பிராட்பேண்ட், அதிவேக தரவு உள்ளிட்ட இதர சேவைகளை வழங்க வழி ஏற்படும். மேலும், ரூ.15,000 கோடிக்கு இந்த இரு நிறுவனங்களும் உத்தரவாதப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான ஊழியர்களுக்கு இந்த இரு நிறுவனங்களும் கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளன. இதற்கு ஆகும் செலவையும் மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் ஏற்பது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.