Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பி.என் . பணிக்கர் வாசிப்பு நாள் தொடக்க விழாவில் பிரதமர் உரை – வாசிப்பு மாத விழா-

s20170617107706


வாசிப்பு மாத தொடக்க விழாவில் பங்கேற்று பசுவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன், இந்த விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்த பி.என்.

அறக்கட்டளையினருக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். படிக்கும் பழக்கத்தை விட பெரிய மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை அதுபோல, அறிவை விட பெரிய பலம் வேறேதும் இல்லை.

நண்பர்களே, எழுத்தறிவித்தல் துறையில் கேரளா நாட்டின் சுடர்ஒளியாகவும், மற்றவர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகிறது. 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற முதல் நகரமும், 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டமும் கேரளாவில் தான் இருக்கின்றன.

100 சதவீத தொடக்க கல்வியை எட்டிய மாநிலமும் கேரளாதான். நாட்டின் மிகப்பழமையான நூலகங்கள், கல்லுரிகள், பள்ளிக்கூடங்கள் கேரளாவில் தான் உள்ளன. இந்த சாதனைகளை அரசால் மட்டும் செய்துவிட முடியாது. குடிமக்கள், தொண்டு நிறுவனங்கள் இந்த சாதனைக்காக முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும்.

மக்கள் பங்களிப்பு என்பதில் கேரளா முன் மாதிரியாக விளங்குகிறது. மறைந்த திரு. பி.என். பணிக்கர் மற்றும் அவரது அறக்கட்டளை இதற்காக செய்த பங்களிப்பு மறக்க முடியாததாகும். கேரளாவில் நூலக கட்டமைப்பின் வழிகாட்டியாக இருந்தவர் திரு. பி.என். பணிக்கர். கேரளா கிரந்தகசாலா சங்கம் மூலம் அதை அவர் சாத்தியமாக்கினார். 45 ஊரக நூலகங்களுடன் இந்த அமைப்பை அவர் 1945ல் உருவாக்கினார்.

பணிசார்ந்த தேவைகளுக்காக மட்டும் படித்து அறிவை பெருக்கி கொள்வது என்ற வரம்பு ஏற்புடையாதாக இருக்காது. வாசிப்பதன் மூலம் பழக்கவழக்கங்கள் மாற்றம் சமூக பொறுப்பு ஆகியவை வளரும். தேசத்திற்கு சேவை செய்யவும், மனிதநேயத்தை வளர்க்கவும் உதவும். நாட்டிலும், சமுதாயத்திலும் தீமைகளை ஒழிக்க வாசிப்பு உதவும். அமைதி, ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு மரியாதை போன்ற நல்ல கருத்துக்களை பரப்பும்.

கல்வியறிவு பெற்ற பெண் இரண்டு குடும்பங்களுக்கு கற்றுக்கொடுப்பார் என்று சொல்வார்கள், ஆகவே கற்றலுக்கு முன் உதாரண மாநிலம் என்ற சிறப்பு கேரளாவுக்குத்தான் உள்ளது. இதற்காக பி.என். பணிக்கர் அறக்கட்டளை, ஏரளாமானஅரசு நிறுவனங்களுடன் இணைந்தும், தனியார் அமைப்புகளுடன் சேர்ந்தும், உள்ளூர் தொண்டு அமைப்புகளுடன் பங்கேற்றும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று நான் படித்திருக்கிறேன்.,

சமுதாயத்தில் உரிய உரிமைகளை பெறாத ஏழை எளிய மக்கள் 300 மில்லியன் பேரை 2022ம் ஆண்டுக்குள் சென்றடைவதுதான் அவர்கள் இலக்கு. இந்த அறக்கட்டளையின் பிரதான இலக்கு என்னவென்றால் வாசிப்பு பழக்கத்தை தீவிரப்படுத்துதலும் வளமையை ஏற்படுத்துதலும்தான்.

வாசித்தல் ஒருவரது கற்பனையை , நினைவாற்றலை விரிவுபடுத்தும். நன்கு படித்த சமூகம், இந்தியாவை உலகளாவிய அளவில் உயர்த்த உதவும். இதே உணர்வுடன் தான் இதுபோன்ற ஒரு இயக்கத்தை வான்சி என்ற பெயரில் நான் தொடங்கினேன்.

குஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது குஜராத் வாசித்தல் என்ற பெயரில் தொடங்கினேன், பொது நூலகங்களுக்கு நான் சென்று புத்தகங்கள் வாசிப்பேன். அதன் மூலம் மக்களை படிக்க தூண்டினேன். குறிப்பாக இளம் சமுதாயத்தினர் படிக்க வேண்டும்., கிராந்த் மந்திர் என்ற பெயரில் கிராமங்களில் புத்தகாலயங்களை உருவாக்க குடிமக்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இந்த புத்தகாலயங்கள் 50 அல்லது 100 புத்தகங்களுடன்கூட இருக்கலாம்.

ஒருவருக்கு வாழ்த்து சொல்லும்போது பரிசுக்கு பதிலாக புத்தகங்களை கொடுக்குமாறு கூறினேன். இத்தகைய நடவடிக்கைகள் பெரும் மாற்றத்தினை உருவாக்கும்.. உபநிடத காலத்தில் அறிவு என்பது தனி மனிதர்களின் வயது சார்ந்து மதிப்புக்குரியதாக இருந்தது. இன்று நாம் தகவல் களஞ்சிய உலகில் இருக்கிறோம். அறிவுதான் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

டிஜிட்டல் நூலகங்கள் பற்றிய முன்னோடி திட்டத்தினை நான் ஏற்கெனவே சொன்னேன். பணிக்கர் அறக்கட்டளை இந்திய பொதுத்துறை நூலக இயக்கத்துடன் இணைந்து 18 பொது நூலகங்களை இந்த மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற இயக்கம் நாடு முழுவதும் பரவவேண்டும் என்பதே என் விருப்பம். இந்த இயக்கம் பொதுமக்கள் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. சமூக பொருளாதார மாற்றங்களை உருவாக்கவும் இந்த இயக்கம் செயல்பட வேண்டும்,.

நல்ல அறிவுசார் அடிக்கல் தான் எதிர்கால சமுதாயத்தின் நற்கட்டமைப்புக்கு அடிப்படையாகும். மாநில அரசாங்கம் ஜூன் 19ம் தேதியை வாசிப்பு தினமாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பெரும் செயல்பாட்டிற்கு பெரும்முயற்சியும் தேவை. இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டிற்கு மத்திய அரசும் உதவிகரமாக இருக்கும்,

கடந்த 2 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஒருகோடியே 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தஅறக்கட்டளை டிஜிட்டல் எழுத்தறிவு முறைக்கு மாற கவனம் செலுத்துவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்த நேரத்தில் அவசியமானதாகும்.

நண்பர்களே நான் மக்கள் சக்தியில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். அந்த சக்திக்கு நாட்டில் சிறந்த சமூகத்தை உருவாக்கும் திறன் உண்டு. இங்கு இருக்கும் ஒவ்வொரு இளைஞரும் வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்துவதற்கான உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் அதை செய்ய வேண்டும். இந்தியா அறிவுசார் உலகின் மையமாக இருக்க வேண்டும்.

நன்றி.

*****