Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘பிளாக்ஸ்டோன்’ தலைவரும் இணை நிறுவனருமான ஸ்டீபன் சூவர்ஸ்மானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

‘பிளாக்ஸ்டோன்’ தலைவரும் இணை நிறுவனருமான ஸ்டீபன் சூவர்ஸ்மானுடன் பிரதமர் மோடி சந்திப்பு


பிளாக்ஸ்டோன்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான திரு. ஸ்டீபன் சூவர்ஸ்மானை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்தியாவில் பிளாக்ஸ்டோன்நிறுவனம் தற்போது செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்தும், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் திரு. சூவர்ஸ்மான் பிரதமர் மோடியிடம் விவரித்தார். தேசிய கட்டமைப்பு மூலமான திட்டங்கள் மற்றும் தேசிய பணமாக்குதல் திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவில்  உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

***