Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம்,  பிரதமர் ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்.) (இமாச்சல பிரதேசம்), பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட தனது ஒப்புதலை வழங்கியது. இத்திட்டத்திற்கான செலவு ரூ.1351 கோடியாகும்.

சிறப்பம்சங்கள் :

  • கட்டப்படுவதற்கு முந்தைய கட்டமாக 12 மாதங்களாகவும், கட்டுமான கட்டமான 30 மாதங்களாகவும் மற்றும் நிலைபெறச் செய்தல்/துவக்குதல் கட்டமான 6 மாதங்களாகவும் கொண்டு, 48 மாதங்களுக்கு முன்பாக புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.
  • இந்நிறுவனம், 750 படுக்கை வசதிகள் மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை கொண்ட மருத்துவமனையை கொண்டிருக்கும்.
  • ஆண்டுதோறும் 100 எம்.பி.பி.எஸ். மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட மருத்துவக் கல்லூரியையும் இது கொண்டிருக்கும்
  • ஆண்டுதோறும் 60 பி.எஸ்.ஸி. (செவிலியர்) மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட செவிலியர் கல்லூரி
  • புதுதில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை போன்றே குடியிருப்பு வளாகங்கள் மற்றும் இதர வசதிகள்/சேவைகள்
  • மருத்துவமனை, 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன், 20 வல்லமை/மிக வல்லமைத் துறைகளை கொண்டிருக்கும்.
  • பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சையளிப்பதற்காக 30 படுக்கைகள் கொண்ட ஆயூஷ் துறையை இது கொண்டிருக்கும்.

தாக்கம்:

  • புதிய எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்துவதன் மூலம், மக்களுக்கு மிகச் சிறந்த உடல்நல கவனிப்பு வசதியை அளிப்பதுடன், தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்.) கீழ் இப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை நிறுவனங்கள்/வசதிகளுக்கு பெருமளவில் மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் கிடைக்க உதவுதல் ஆகிய இரு நோக்கங்கள் நிறைவேறும்.

பின்னணி:

இத்திட்டத்தின் கீழ், புவனேஸ்வர், போபால், ராய்பூர், ஜோத்பூர், ரிஷிகேஷ் மற்றும் பாட்னாவில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், ரே பரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 2015-ம் ஆண்டில், நாக்பூர்(மகராஷ்டிரா), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் குண்டூரில் உள்ள மங்களகிரி (ஆந்திர பிரதேசம்) ஆகிய மூன்று இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும், 2016-ம் ஆண்டில், பாதிண்டா மற்றும் கோரக்பூர் ஆகிய இரண்டு இடங்கல் எய்ம்ஸ் மருத்துவமனை அளிக்கவும் மற்றும் காம்ரூப்பில் (அசாம்) எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*****