Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து


குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

“குடியரசுத் தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை இறைவன் வழங்கட்டும்.

குடியரசுத் தலைவராக அவரது பதவிக்காலம் தொடங்கியதும், அவரது எளிமை மற்றும் கருணை குணம் மூலம், இந்திய மக்களுக்கு அவர் மீது பேரன்பு ஏற்பட்டுள்ளது.

125 கோடி இந்தியர்களின், குறிப்பாக ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் விருப்பத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பதை குடியரசுத் தலைவரிடம் நான் எப்போதுமே கண்டிருக்கிறேன்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.