Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பீலே-யின் மறைவு உலக விளையாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 “பீலே-யின் மறைவு உலக விளையாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய கால்பந்து நட்சத்திரமாக திகழ்ந்த அவர், நாடுகளின் எல்லைகளைத் தாண்டி புகழ்பெற்று விளங்கினார். அவரது மிகச் சிறந்த விளையாட்டு திறன்களும், வெற்றிகளும் வரும் தலைமுறையினருக்கு எப்போதும் ஊக்கமளிக்கும்.  அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

*******

AP/PLM/KPG/KRS