Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பாரிஸ் நகரில் பிரதமர் பேச்சுவார்த்தை

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பாரிஸ் நகரில் பிரதமர் பேச்சுவார்த்தை


பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பாரீஸ் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர், அன்பான வரவேற்பு அளித்தமைக்காக பிரதமர் மேக்ரனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக அவருக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக பிரான்ஸ் – இந்தியா உறவுகளில் வெற்றிகரமாக பேணப்பட்டு வரும் மனிதகுல சேவைகள் மற்றும் மாண்புகள் பற்றி பிரதமர் பேசினார். இன்னும் வேகமாக உறவுகள் வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விஷயத்தில், சர்வதேச சூரியசக்தி கூட்டணி பற்றியும், இதில் இந்தியாவும் பிரான்சும் மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சி பற்றியும் குறிப்பிட்டார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஒட்டுமொத்த உலகின் பாரம்பரியமாக உள்ளது என்று வர்ணித்த பிரதமர், மனிதகுலத்தின் எதிர்கால தலைமுறையினரின் நம்பிக்கைக்கு இன்றைய தலைமுறையினர் அளிக்கும் பங்களிப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். அன்னை பூமியை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கூட்டு பொறுப்பு என்றார் அவர். தனது அரசியல் பயணத்தில் முக்கிய அங்கமாக பாரீஸ் நகரம் உள்ளது என்று தெரிவித்த பிரதமர், இந்த ஒப்பந்தத்திற்காக இநதியாவும் பிரான்சும் தோளோடு தோள் நின்று பாடுபட்டதாகத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது இந்தியர்களின் நம்பிக்கை சார்ந்தது, பல நூற்றாண்டு கால மரபு சார்ந்தது என்று பிரதமர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அதையும் தாண்டி எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு பரிசை விட்டுச் செல்வதற்கு மற்றவர்களுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் கூறினார்.

பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் தாங்கள் விவாதித்ததாக பிரதமர் தெரிவித்தார். ஒன்றுபட்ட முற்போக்கான ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.