பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தனர்.
பல்வேறு விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் பயனுள்ள உரையாடல் நடத்தினர்.
திரு சுனக் இந்தியாவின் மகத்தான நண்பர் என்றும், இந்தியா- பிரிட்டன் உறவுகள் மேலும் வலுவடைவதில் அவர் ஆர்வம் கொண்டவர் என்றும், திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பயனுள்ள வகையில் கலந்துரையாடினோம்.
திரு சுனக் இந்தியாவின் மகத்தான நண்பர். இந்தியா -பிரிட்டன் உறவுகள் மேலும் வலுவடைவதில் அவர் ஆர்வம் கொண்டவர்.
@RishiSunak @SmtSudhaMurty”
***
TS/SMB/KV/KR
It was a delight to meet former UK PM, Mr. Rishi Sunak and his family! We had a wonderful conversation on many subjects.
— Narendra Modi (@narendramodi) February 18, 2025
Mr. Sunak is a great friend of India and is passionate about even stronger India-UK ties.@RishiSunak @SmtSudhaMurty pic.twitter.com/dwTrXeHOAp