1. |
போதை மருந்துகள், மனோவியலை பாதிக்கும் பொருட்கள் மற்றும் இரசாயன முன்னோடி பொருட்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களின் சட்டவிரோத போக்குவரத்தை தடுத்தல் மற்றும் சட்டவிரோத பயன்பாட்டை தடுத்தல் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் |
திரு.ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் |
திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் |
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும், சட்டவிரோத போக்குவரத்து மற்றும் போதை மருந்து நுகர்வு பயன்பாட்டை ஆகியவற்றை எதிர்கொள்ளவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். |
2. |
இந்தியா-பிரான்ஸ் குடிபெயர்வு மற்றும் இடமாற்றத்திற்கான கூட்டு ஒப்பந்தம் |
திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சர் |
திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் |
இந்த ஒப்பந்தம், இடமாற்றத்தைப் பொறுத்து தற்காலிக சுற்று குடிபெயர்விற்கும், தாயகத்திற்கு திறனாளர்கள் மீண்டும் திரும்புவதை ஊக்குவிக்கவும் உதவும்.
|
3. |
கல்வித்தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்கச் செய்வதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் |
திரு.பிரகாஷ் ஜவடேகர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் |
திருமதி.ஃப்ரட்ரிக் வீடால், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறை அமைச்சர்
|
கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்க வழிவகுப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். |
4. |
ரயில்வே துறையில் தொழில்நுட்ப கூட்டுறவிற்காக ரயில்வே அமைச்சர் மற்றும் பிரான்ஸின், எஸ்.என்.சி.எப். மோட்டிலிட்டிஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர் |
திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் |
மிக அதிவேக மற்றும் அதிவேக ரயில்; நிலைய புனரமைப்பு, தற்போதைய செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை நவீனமயமாக்கல்; மற்றும் புறநகர் ரயில்கள் ஆகிய முன்னுரிமை பிரிவுகளின் மீதான பரஸ்பர கூட்டுறவு மற்றும் கவனத்தை மேலும் வலுப்படுத்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும்.
|
5. |
நிரந்தர இந்திய-பிரான்ஸ் ரயில்வே மன்றத்தை உருவாக்குவதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே விருப்பக் கடிதம் |
திரு.பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர் |
திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் |
தற்போதுள்ள கூட்டுறவை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்திய-பிரான்ஸ் நிரந்தர ரயில்வே மன்றத்தை உருவாக்குவதே இந்த விருப்ப கடிதத்தின் நோக்கமாகும்.
|
6. |
தங்களது ஆயுதப்படைகளுக்கு இடையே போக்குவரத்து உதவியை பரஸ்பரம் அளிப்பதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் |
செல்வி.நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் |
திருமதி.ஃப்ளாரன்ஸ் பார்லி, ஆயுதப்படைகள் துறை அமைச்சர் |
அனுமதியுடனான துறைமுக வருகைகள், கூட்டு செயல்பாடுகள், கூட்டு பயிற்சிகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற்றின் போது இருநாட்டு ஆயுதப் படைகளுக்கு இடையே போக்குவரத்து உதவி, விநியோகம் மற்றும் சேவைகளை பரஸ்பரம் அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
|
7. |
சுற்றுச்சூழல் துறையில் கூட்டுறவிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை (எம்.ஓ.யூ.) |
டாக்டர். மகேஷ் ஷர்மா, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் |
திருமதி.புருனே போய்ர்சன், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றம் அமைச்சகத்திற்கான இணை அமைச்சர் |
சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத் துறையில் இரு நாட்டு அரசுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை ஏற்படுத்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும்.
|
8. |
நிலையான நகர்ப்புற வளர்ச்சித் துறையில் கூட்டுறவிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் |
திரு. ஹர்தீப் சிங் பூரி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) |
திருமதி.புருனே போய்ர்சன், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றம் அமைச்சகத்திற்கான இணை அமைச்சர் |
ஸ்மார்ட் நகர வளர்ச்சி, நகர்ப்புற பெருமளவிலான போக்குவரத்து அமைப்புகளின் மேம்பாடு, நகர்ப்புற குடியமர்த்தல் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றில் தகவல் பரிமாறி கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
|
9. |
ரகசிய மற்றும் பாதுகாக்கப்பட்ட தகவல் பரஸ்பரம் பரிமாறி கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் |
திரு.அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் |
திரு.பிலிப்பி ஈட்டைனி, பிரான்ஸ் அதிபரின் தூதரக ஆலோசகர் |
இரகசிய மற்றும் பாதுகாக்கப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான பொது பாதுகாப்பு வரைமுறைகளை இந்த ஒப்பந்தம் விவரிக்கிறது.
|
10. |
கடல்சார் விழிப்புணர்வு இயக்கம் பற்றி முன் உருவாக்க ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) மற்றும் மத்திய தேசிய விண்வெளி ஆய்வுகள் (சி.என்.இ.எஸ்.) இடையே செயல்பாட்டு ஒப்பந்தம் |
திரு.கே.சிவம், செயலர், விண்வெளித் துறை & தலைவர், ஐ.எஸ்.ஆர்.ஒ. |
திரு.ஜீயன்-யுவஸ் லீ கால், தலைவர், சி.என்.இ.எஸ். |
தங்களது பகுதிகளில் செயற்கைக்கோள்களை கண்டறிவது, அடையாளம் காண்பது மற்றும் கண்காணிக்கும் விவகாரத்தில் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை இந்த ஒப்பந்தம் அளிக்கும். |
11. |
இந்திய அணுசக்தி நிறுவனம் மற்றும் இ.டீ.எப்., பிரான்ஸ் இடையே தொழில் முன்னேற்ற ஒப்பந்தம் |
திரு.சேகர் பாசு, செயலர், அணுஆயுத எரிசக்தி துறை |
திரு.ஜீன் பெர்னார்ட் லெவி, தலைமை செயல் அலுவலர், இ.டீ.எப். |
ஜெய்தாபூர் அணு மின்நிலைய திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழியை இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது
|
12. |
நீரமைவு வரைவியல் மற்றும் கடற்சார் வரைபடவியல் துறைகளில் கூட்டுறவிற்காக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே இருதரப்பு ஒப்பந்தம் |
திரு.வினய் க்வாத்ரா, இந்திய தூதர் |
திரு.அலெக்சாண்டர் ஜீக்லெர், பிரான்ஸ் தூதர் |
நீரமைவு வரைவியல், கடல் ஆவணப்படுத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தகவல் துறையில் இருதரப்புகளுக்கு இடையேயான கூட்டுறவை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.
|
13. |
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சவாலான செயல்முறை மூலம் ஸ்மார்ட் நகர் திட்டங்களுக்கு 100 மில்லியன் ஈரோக்களுக்கான கடன் வசதி ஒப்பந்தம் |
திரு.வினய் க்வாத்ரா, இந்திய தூதர் |
திரு.அலெக்சாண்டர் ஜீக்லெர், பிரான்ஸ் தூதர் |
ஸ்மார்ட் நகர் இயக்கத்தின் கீழான நிதி, மற்றும் இத்திட்டத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அளிக்கும் நிதியில் ஏற்படும் இடைவெளியை பூர்த்தி செய்திட இந்த ஒப்பந்தம் உதவும்.
|
14. |
தேசிய சூரியஎரிசக்தி நிறுவனம் (என்.ஐ.எஸ்.இ.), புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தேசிய சூரியஎரிசக்தி நிறுவனம் (ஐ.என்.இ.எஸ்.), பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.வினய் க்வாத்ரா, இந்திய தூதர் |
திரு.டேனியல் வெர்வார்டே, நிர்வாகி, அணு மற்றும் மாற்று எரிசக்தி ஆணையம் (சி.இ.ஏ.) |
இந்த ஒப்பந்தத்தினால், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மூலம் சூரிய எரிசச்தி துறைகளில் (சூரியவொளி மின்னழுத்தம், சேமிப்பு தொழில்நுட்பங்கள், போன்றவை) ஐ.எஸ்.ஏ. உறுப்பு நாடுகளில் உள்ள திட்டங்களில் இரு நாடுகளும் பணியாற்றும்.
|
வ. எண். |
புரிந்துணர்வு உடன்படிக்கை/ ஒப்பந்தம் | இந்திய தரப்பு | பிரான்ஸ் தரப்பு | நோக்கம் |
---|
****