Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிராணப் பிரதிஷ்டைக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


அயோத்திதாமில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் நாளை நடைபெறவுள்ள பிராண பிரதிஷ்டைக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதுடன், நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வளப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிராண பிரதிஷ்டையை முன்னிட்டுக் குடியரசுத்தலைவர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:

"மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள்,

 
அயோத்தி தாமில் ஸ்ரீ ராமபிரானின்  பிராண பிரதிஷ்டையின் நல்ல சந்தர்ப்பத்தில் உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த வரலாற்றுத் தருணம் இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேலும் செழுமைப்படுத்தி, நமது வளர்ச்சிப் பயணத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்."

 

***

(Release ID: 1998478)

ANU/SMB/IR/KPG/KRS