பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை இழந்த யாத்ரீகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நான் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன். நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். ”
***
(Release ID: 2097238)
TS/IR/AG/KR
प्रयागराज महाकुंभ में हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं ने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा हुआ है। इस सिलसिले में मैंने…
— Narendra Modi (@narendramodi) January 29, 2025