Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரயாக்ராஜின் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

பிரயாக்ராஜின் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

பிரயாக்ராஜின் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

பிரயாக்ராஜின் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரயாக்ராஜில் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்று, இன்று உரையாற்றினார்.

திரிவேணிசங்கமத்தில் புனித நீராடிய பிறகு, தூய்மையான கும்பமேளாவை உறுதி செய்வதற்கான துப்புரவுப் பணியாளர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது பாதங்களை பிரதமர் தூய்மைப்படுத்தினார். 

பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு திரளாக வந்துள்ள பக்தர்களுக்கான சிறப்பான வசதிகளை உறுதி செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர்கள் “கர்மயோகிகள்” என்று பிரதமர் புகழ்ந்துரைத்தார். இதுதொடர்பாக, தேசிய பேரிடர் மீட்புப்படையினர், படகு ஓட்டுபவர்கள் உள்ளூர் மக்கள் மற்றும் துப்புரவுப் பணியார்களின் பங்கினை அவர் குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களில் 21 கோடி பக்தர்களுக்கும் அதிகமானவர்கள் இங்கு திரளாக வந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.  தம்மால் முடியாதது எதுவும் இல்லை என்பதை துப்புரவுப் பணியாளர்கள் நிரூபித்திருப்பதை குறிப்பிட்ட அவர்,  இந்த ஆண்டு கும்பமேளாவை நடத்துவதற்கு அவர்கள் மிகவும் தகுதிபடைத்தவர்கள் என்று பாராட்டினார். சில துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களை தாம் தூய்மைப்படுத்திய சம்பவம், தமது நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கான கௌரவ விருது இன்று அறிவிக்கப்பட்டிருப்பது, துப்புரவுப் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தக்க தருணத்தில் துணைநிற்கும் என்று பிரதமர் கூறினார்.

தூய்மை இந்தியா திட்டம், அதிவேகத்தில் முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இலக்கை நோக்கி நாடு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், இந்த ஆண்டு முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது என்றும் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். இதில் முதல்கட்டப் பணியை தாம் நேரில் கண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதுவும் கங்கையை தூய்மைப்படுத்தும் மத்திய அரசுத் திட்டத்தின் முயற்சிகளால் கிடைத்த பலன் என்றும் அவர் தெரிவித்தார். கங்கை ஆற்றுக்கு வந்து சேரும் குப்பைகள் தடுக்கப்பட்டிருப்பதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சில தினங்களுக்கு முன்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயுடன் தமக்கு வழங்கப்பட்ட சியோல் அமைதிப் பரிசை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தத் தொகை முழுவதையும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நன்கொடையாக தாம் வழங்கிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், பிரதமரான தமக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் அனைத்தும் ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைத்த வருவாய் அனைத்தும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

கும்பமேளா பணியில் ஈடுபட்டுள்ள படகு ஓட்டுபவர்களை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ள பக்தர்கள், நாட்டு விடுதலைக்குப் பிறகு முதல்முறையாக  அக்ஷய் வாத் வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆன்மிகம், உண்மை மற்றும் நவீனத்தின் கலவையாக அமைந்துள்ள கும்பமேளா குறித்த தமது பார்வையை நிறைவேற்றுவதற்காக அங்கு திரண்டிருந்த ஒவ்வொருவரையும் பிரதமர் பாராட்டினார். உத்தரப்பிரதேச காவல்துறையின் பங்களிப்பையும் அவர் புகழ்ந்துரைத்தார்.

இந்த ஆண்டுக்கான கும்பமேளா ஏற்பாடுகளில், மேம்படுத்தப்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்றும், கும்பமேளா நிறைவடைந்தபோதிலும் இந்த வசதிகள் இந்நகருக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

*****