Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல விஞ்ஞானி டாக்டர் என். கோபாலகிருஷ்ணனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல விஞ்ஞானி டாக்டர் என். கோபாலகிருஷ்ணனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“டாக்டர் என். கோபாலகிருஷ்ணன் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையாக இருந்தார். அறிவியல் மற்றும் கல்வித் துறைக்கு  குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். ஆழ்ந்த ஆன்மீக அறிவு மற்றும் இந்திய தத்துவ சாஸ்திரத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டிற்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அன்னாரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

(Release ID: 1920387)

AD/BR/SG