Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல பின்னணிப் பாடகர் திரு. பி. ஜெயச்சந்திரனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல பின்னணிப் பாடகர் திரு. பி. ஜெயச்சந்திரனின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், தொடர்ந்து தலைமுறைகளின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கும் என்று கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

“திரு பி. ஜெயச்சந்திரன் அவர்கள், பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற குரல்வளப் பேறு பெற்றவர்.  பல்வேறு மொழிகளில் அவர் பாடிய ஆத்மார்த்தமான பாடல்கள், வரும் தலைமுறைகளின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கும். அவரது மறைவு  வேதனை அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு  எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

(Release ID: 2091666)

TS/BR/KR

***