Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல பாரம்பரிய பாடகர் டாக்டர் பிரபா அத்ரே மறைவுக்கு பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற பாரம்பரிய பாடகர் டாக்டர் பிரபா அத்ரே மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“டாக்டர் பிரபா அத்ரே அவர்கள்இந்திய பாரம்பரிய இசையின் அறிவுமேதையாக இருந்தார், அவரது பணி, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பாராட்டப்பட்டது. அவரது வாழ்க்கை, மேன்மை மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்ததாக இருந்தது. அவரது முயற்சிகள் நமது கலாச்சார கட்டமைப்பை பெரிதும் வளப்படுத்தியுள்ளன. அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

*****

ANU/PKV/RB/DL