Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல தெலுங்கு நடிகர் சந்திர மோகன் மறைவுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரபல தெலுங்கு நடிகர் சந்திர மோகனின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பிரபல தெலுங்கு நடிகர் திரு சந்திர மோகன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. திரைப்பட உலகில் பிரகாசமானவராக அவர் திகழ்ந்தார். அவரது திறன்வாய்ந்த நடிப்பு மற்றும் தனித்துவமான ஈர்ப்பு, பல்வேறு தலைமுறைகளின் ரசிகர்களைக் கவர்ந்தது. அவரது மறைவு, படைப்புலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அதை நிரப்புவது கடினம். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.”

 

****  

PKV/PLM/DL