Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல சமஸ்கிருத அறிஞர் பண்டித ரேவா பிரசாத் திவிவேதியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல சமஸ்கிருத அறிஞர் பண்டித ரேவா பிரசாத் திவிவேதியின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பண்டித ரேவா பிரசாத் திவிவேதி அவர்களின் மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் பல முன்னுதாரணங்களை அவர் உருவாக்கினார். அன்னாரது மறைவு, சமுதாயத்திற்கு ஈடுசெய்யமுடியாத  இழப்பாகும். இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.

*****************