Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல சட்ட அறிஞர் பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரபல சட்ட அறிஞர் பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் பணி, சட்டக் கல்வியில் அவரது வலுவான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

புகழ்பெற்ற கல்வியாளரான பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தா ஜியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. சட்டத் துறையில் அவரது பங்களிப்பு மதிப்புமிக்கவை. சட்டக் கல்வி மீதான அவரது வலுவான அர்ப்பணிப்பை அவரது பணி எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் முக்கிய உறுப்பினராகவும், வலுவான இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு ஆதரவாகவும் அவர் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.” 

***

ANU/PKV/BS/AG