Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல கமக கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு ஹெச்.ஆர். கேசவ மூர்த்தியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல கமக கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு ஹெச்.ஆர். கேசவ மூர்த்தியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“கமக கலையையும், கர்நாடக மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்கு திரு ஹெச்.ஆர். கேசவமூர்த்தி மேற்கொண்ட முயற்சிகளுக்காக நாம் என்றும் அவரை நினைவில் கொள்வோம். ஏராளமான மாணவர்களுக்கு தலைசிறந்த வழிகாட்டியாகவும் அவர்  நினைவுகூரப்படுவார். அவரது மறைவினால் மிக துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும்,  நலவிரும்பிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

*******

(Release ID: 1885573)

IR/RB/RR