Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல கட்டடக்கலை நிபுணர் டாக்டர் பி வி தோஷி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பிரபல கட்டடக்கலை நிபுணர் டாக்டர் பி வி தோஷி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 “டாக்டர் பிவி தோஷி அவர்கள் மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணராகவும், பல்வேறு நிறுவனங்களை நிர்மாணித்தவராகவும் திகழ்ந்தவர்.  இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட நுட்பமான சிறந்த பணிகள் மூலம் வருங்கால தலைமுறையினர் கட்டடக்கலை நுட்பத்தை அறிந்து கொள்வார்கள். அவருடைய மறைவு கவலை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல். ஓம் சாந்தி.”

***

AP/IR/AG/KRS

(Release ID: 1893222)