Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் வியட்நாமில் பயணம் மேற்கொள்ள உள்ளார். சீனாவில் ஹாங்ஜோ – வில் நடைபெறும் G-20 தலைவர்கள் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 02, 2016 முதல் செப்டம்பர் 03, 2016 வரை வியட்நாமில் பயணம் மேற்கொள்கிறார். சீனாவில் காங்ஜோ நகரில் நடைபெறும் G-20 தலைவர்களின் வருடாந்திர உச்சி மாநாட்டில் செப்டம்பர் 03, 2016 முதல் செப்டம்பர் 05, 2016 வரை பங்கேற்கிறார்.

தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள பல செய்திகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

வியட்நாம் மக்களுக்கு அவர்களது தேசிய தினத்தை ஒட்டி நல்வாழ்த்துகள். வியட்நாம் நமது நட்பு நாடு. அதனுடனான உறவுகளை நாம் போற்றுகிறோம்.

“இன்று மாலை நாம் வியட்நாம் தலைநகர் ஹனாய் சென்றடைகிறேன். இது முக்கியமான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே ஆன நெருங்கிய உறவை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும். வியட்நாமுடன் நமது இருதரப்பு உறவுகளுக்கு எனது அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. இந்தியா – வியட்நாம் பங்களிப்பு ஆசியாவுக்கு பயனுள்ளதாகவும் உலகின் இதரப் பகுதிகளுக்கு உதவுவதாகவும் அமையும்.

இந்தப் பயணத்தின் போது பிரதமர் திரு நிகுயன் ஜூவான் பிகுக்குடன் விரிவான பேச்சுக்களை நடத்த உள்ளேன். நமது இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நாங்கள் ஆய்வு செய்வோம்.

நான் வியட்நாம் அதிபர் திரு டிரான் டாய் குவாங், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் திரு நிகுயன் பூ டிராங், வியட்நாம் தேசிய பேரவைத் தலைவர் திருமதி நிகுயன் தி கிம், நிகான் ஆகியோரை சந்திக்கிறேன்.

வியட்நாமுடன் வலுவான பொருளாதார உறவுகளை இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மையை மேம்படுத்தும் வகையில் உருவாக்க விரும்புகிறோம். எனது வியட்நாம் பயணத்தின் போது இரு நாட்டு மக்களுக்கு இடையே ஆன உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ளுவேன். வியட்னாமில் 20 – ம் நூற்றாண்டின் சிறந்த தலைவர்களின் ஒருவரான ஹோ சி மின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கும். தேசிய வீரர்கள் மற்றும் நாட்டுக்கு உயிர்த் தியாகம் செய்தோர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் வலையம் வைக்க உள்ளேன். குவான் சு கோவில் கோபுரத்துக்கும் செல்ல உள்ளேன்.

ஜி – 20 தலைவர்கள் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2016 செப்டம்பர் 3 முதல் 5 வரை சீனாவின் ஹாங்ஜோ நகருக்கு செல்கிறேன். முக்கியமான இருதரப்பு பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாமிலிருந்து ஹாங்ஜோ சென்றடைகிறேன்.

ஜி – 20 உச்சி மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களுடன் அவசரமான சர்வதேச முன்னுரிமைகள் சவால்கள் குறித்து பேசுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்கும். உலகப் பொருளாதாரத்தை நிலைத்த வளர்ச்சிப் பாதையில் நிலை நிறுத்துவதற்கு உரிய வழிவகைகளை நாங்கள் விவாதிப்போம். சர்வதேச சமூக, பாதுகாப்பு, பொருளாதாரச் சவால்களுக்கு பெரிய பதில் நடவடிக்கைகள் குறித்தும் பேசுவோம்.

நம்முன் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஆக்க பூர்வமாக இந்தியா கையாளும். உலகெங்கும் உள்ள மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நிலைத்த அனைத்தையும் உள்ளடக்கிய சர்வதேச பொருளாதார நிலைமைக்கான பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்லுவோம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள மக்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படும்.

மிகவும் பயனுள்ள விளைவுகள் அடிப்படையிலான உச்சி மாநாட்டை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்”.

*****