இந்தியா நார்டிக் இரண்டாவது மாநாட்டுக்கு இடையே கோபன்ஹேகனில் பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து பேசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்வே பிரதமர் திரு ஸ்டோர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.
அப்போது இருதரப்பு உறவில் தற்போதைய நடவடிக்கைகள், எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆய்வு மேற்கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய மற்றும் காற்றாலைத் திட்டம், மீன்பிடிப்பு, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடு, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். ஐநா பாதுகாப்பு குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள இந்தியாவும், நார்வேயும், சர்வதேச விவகாரங்களில் பரஸ்பரம் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
***************
Boosting friendship with Norway.
— PMO India (@PMOIndia) May 4, 2022
Prime Ministers @narendramodi and @jonasgahrstore meet in Copenhagen. They are taking stock of the full range of bilateral relations between the two nations and ways to deepen developmental cooperation. pic.twitter.com/FbxzJHiyYU