Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடியும் பிரதமர் கோஸ்டாவும் இணைந்து புதுமையான தொழில்முனைவு இணைய தளத்தைத் துவக்கி வைத்தனர்

பிரதமர் மோடியும் பிரதமர் கோஸ்டாவும் இணைந்து புதுமையான தொழில்முனைவு இணைய தளத்தைத் துவக்கி வைத்தனர்


பிரதமர் மோடியும் பிரதமர் கோஸ்டாவும் இணைந்து இந்திய-போர்த்துகல் சர்வதேச தொழில்முனைவு மையம் என்ற புதுமையான தொழில்முனைவு இணைய தளத்தை இன்று லிஸ்பனில் துவக்கி வைத்தனர்.

இந்தியாவில் தொழில்துவங்குவதற்கான அமைப்பின் முன்முயற்சியில் வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் போர்த்துகல்லின் தொழில் துவங்கும் அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் இருநாடுகளின் தொழில்முனைவர்களின் கூட்டணிக்கு உதவி செய்யும் வகையில் இந்த இணைய தள மேடை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய-போர்த்துகல் சர்வதேச தொழில்முனைவு மையம் என்ற இந்த மேடை பலவகையான உதவிக் கருவிகளைக் கொண்டதாக அமைந்துள்ளதோடு, பெங்களூர், தில்லி மற்றும் லிஸ்பன் ஆகிய நகரங்களில் உள்ள தொழில்முனைவுக்கான முக்கிய பகுதிகளைப் பற்றிய விவரங்களையும், தொழில் முனைவு குறித்த கொள்கை, வரிகள் மற்றும் விசா விவரங்கள் ஆகியவை தொடர்பான விஷயங்களைப் பற்றிய விவரங்களையும் தெரிவிப்பதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சந்தைக்குச் செல்வதற்கான வழிகாட்டியையும் இது உருவாக்கும்.

இந்திய-போர்த்துகல் சர்வதேச தொழில்முனைவு மையம் இந்த இரு நாடுகளின் கொள்திறனை வளர்த்தெடுப்பது, சம்பந்தப்பட்ட துறைகளில் தொழில் முனைவு முயற்சிகள், முதலீட்டாளர்கள், காப்பகங்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கவும் உதவி செய்யும். இரு நாடுகளிலும் உள்ள தொழில் முனைவு முயற்சிகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியாவிலும் போர்த்துகலிலும் கவுரவ தூதர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலையும் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி:

தொழில் முனைவுத் துறையில் இந்தியாவிற்கும் போர்த்துகலுக்கும் இடையே பரஸ்பர உதவிகளைச் செய்து கொள்ளும்படியான வலுவான தொடர்பு உள்ளது. ஐரோப்பாவில் வர்த்தக நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக போர்த்துகல் திகழ்கிறது. தொழில் முனைவுக்கான உயிரோட்டமான வசதி வாய்ப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் அது உருப்பெற்றுள்ளது. சர்வதேச தொழில்நுட்ப மாநாடு என்ற முக்கியமானதொரு இணைய தள உச்சிமாநாட்டையும் லிஸ்பன் 2016ஆம் ஆண்டிலிருந்து துவங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற இணையதள உச்சிமாநாட்டில் இந்தியாவில் இருந்து 700 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா- போர்த்துகல் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அரசுகள் தொழில் முனைவு முயற்சிகளை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

*****