மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் கே. ஜுக்நாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜுக்நாத், மோடியின் தலைமையின் மீது உலகின் மிகப்பெரிய வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் ஜுக்நாத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்தவும், அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான வலுவான உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் என அவர் கூறினார்.
***
(Release ID: 2022975)
PKV/AG/RR