Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் முத்ரா வங்கித் திட்டம் – பிரதமர் துவக்கி வைத்தார்


பிரதமர் முத்ரா வங்கித் (குறுந் தொழில் பிரிவுகள் வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நிதி முகமை) திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் துவக்கி வைத்தார். சிறு தொழில் முனைவோருக்கு ஆரதவு அளிப்பதே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பெரிதும் உதவும் என்று பிரதமர் தெரிவித்தார். பொருளாதாரத்தில், சிறு தொழில் முனைவோர்களின் பங்களிப்பு குறித்து பேசிய பிரதமர் ஒரு ஆண்டுக்குள் அனைத்து முன்னனி வங்கிகளும் முத்ரா மாதிரியை ஏற்றுக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் தெரிவித்ததாவது:-

நமது நாட்டில் ஒருவரின் கருத்துகளை வைத்தே அனுபவங்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால், உண்மை வேறு. அனைவரும் பெரிய தொழிற்சாலைகள் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது என்ற கருத்தில் உள்ளனர். ஆனால், உண்மையில் பெரிய தொழிற்சாலைகள் ஒரு கோடியே 25 லட்சம் மக்களுக்கே வேலை வாய்ப்பை அளிக்கிறது என்று தெரிவிக்கிறது. அதே சமயம் சிறு தொழில் 12 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

இந்தியாவில் பெரிய தொழிற் சாலைகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. ரூ.11 லட்ச கோடி நிதியை உபயோகப்படுத்தும் 5 கோடி 75 லட்ச சுயத் தொழில் செய்பவர்கள் ஒரு பிரிவுக்கு வெறும் ரூ.17,000 கோடி கடனில் 12 கோடி இந்தியர்களை வேலையில் அமர்த்துகின்றனர். இந்த உண்மைகள் முத்ரா வங்கிற்கான கனவிற்கு வழிவகுத்தது.

நான் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது சுற்றுச் சூழலுக்கு ஏற்ப குடிசை தொழிலான பட்டம் செய்யும் தொழிற்சாலையில் கவனம் செலுத்தினேன். இது வறுமையில் இருந்த பல லட்ச இஸ்லாமிய மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தது. இந்த தொழிலுக்காக சென்னையில் இருந்து ஒரு ஆய்வு நிறுவனத்தை இதில் ஈடுபடுத்தினேன். அவர்கள் இந்த தொழிலுக்கு தேவையான திறன் மேம்பாட்டிற்கு சிறிய உள்ளீடுகளைக் கண்டறிந்தனர். குஜராத்தில், இந்த சிறிய முயற்சியின் உதவியால் பட்டம் செய்யும் தொழில் வளர்ச்சி 35 கோடியில் இருந்து 500 கோடிக்கு வளர்ந்தது எனக்கு பெருமை அளித்தது.

பல்வேறு சிறு தொழில் குறித்து பேசிய அவர், சிறிய உதவியால் பெரிய வளர்ச்சி அடைய திறன் உள்ளது என்று தெரிவித்தார். வறுமையில் உள்ள பெரிய சொத்து அவர்களின் ஒற்றுமையாகும். அவர்களின் ஒற்றுமையையும் முதலீட்டையும் இணைப்பது வெற்றிக்கான முக்கிய பங்காக விளங்கும். குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள கடன் பெறுபவர்கள் கொண்டுள்ள நேர்மையையும் ஒற்றுமையும் வேறு எந்தத் துறையிலும் காண இயலாது.

மக்கள் நிதி திட்டம் வெற்றிப்பெற வங்கித் துறை எடுத்த முயற்சியை நான் பாராட்டுகிறேன். இன்னும் ஒரு ஆண்டுக்குள் முத்ரா விண்ணப்பதாரர்களுக்கு கடன் உதவி அளிக்க வங்கிகள் வரிசையில் காத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு, இந்திய சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறு தொழில் வளர்ச்சிக்கான இந்திய வங்கிகளை நான் பாராட்டுகிறேன்.

நிதி இல்லாதவர்களுக்கு நிதி அளிப்பதே முத்ரா திட்டத்தின் குறிக்கோளாகும். இதுவரை இந்தியாவின் சிறு தொழில் முனைவோர்கள் கடன் வழங்குவோர்களின் சுய நலத்திற்கு ஆளாகினர். ஆனால், தேசிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சிறு தொழில் முனைவோர்களுக்கு, நமது நாடு எனது முயற்சிக்கு பங்களிக்க தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை இப்பொழுது முத்ரா திட்டம் கொண்டுவரும்.

வேளாண் துறையில் மதிப்பு கூட்டப்பட்ட வாய்ப்புகள் குறித்து பேசிய பிரதமர் சமூக அளவில் மதிப்புக் கூட்டப்பட்ட வேலைப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட இணைப்பு உருவாக்குவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். வியாபாரக் குறியீடை மேம்படுத்துவது, விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், நிதி உதவி ஆகியவை சிறு தொழில் முனைவேர்களுக்கு வழங்கப்படும் போது இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாகும்.

ஏற்கனவே, உள்ள கட்டமைப்பில் இது எந்தவித பெரிய மாற்றத்தையும் கொண்டு வராது. மற்றவர்கள் நிலையில் இருந்து சிந்திக்கும் நோக்கம் சிறிது புரிதல், சிறிது முயற்சி ஆகியவற்றை இத்திட்டம் கொண்டுள்ளது. உள்ளூர் தேவை மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் உள்ள குறு நிதி உதவியின் வெற்றிகரமான மாதிரிகளை வங்கிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏழ்மையிலும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது பெரிய அளவில் உதவும்.

வெறும் புதிய திட்டங்களைத் துவக்குவது மட்டும் வளர்ச்சி அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த உறுதியான முடிவுகளைக் கொண்ட மக்கள் நிதி திட்டத்திலும் பெஹல் திட்டத்திலும் காணப்பட்டது போல் உண்மையான வளர்ச்சி, உண்மையான மாற்றத்தில் உள்ளது. சிறப்பாக இயங்கிவரும் நிதி முறைகள் விரைவில் முத்ரா மாதிரியின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளும். அதாவது, சிறிய தொகையை பயன்படுத்தி அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழில் முனைவோறுக்கு உதவி வழங்குவது.

மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மத்திய நிதி துறையின் இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சின்ஹா, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்