பிரதமர் திரு. நரேந்திர மோடி மார்ச் 6 அன்று உத்தராகண்ட்டில் பயணம் மேற்கொள்கிறார். காலை 9:30 மணியளவில், அவர் முக்வாவில் உள்ள கங்காதேவியின் கோவிலில் நடைபெறும் ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபடுகிறார். காலை 10:40 மணியளவில், அவர் மலையேற்றம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஹர்சிலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற உள்ளார்.
உத்தராகண்ட் அரசு இந்த ஆண்டு குளிர்காலச் சுற்றுலா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். இந்தத் திட்டம் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் உள்ளூர்ப் பொருளாதாரம், தங்குமிடங்கள், சுற்றுலா வணிகங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2108283)
TS/IR/RR/KR