Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல்


மாண்புமிகு நேபாளப் பிரதமர் திரு. கே பி சர்மா ஒலியிடம் இருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுக்கும் இந்திய மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த நேபாள பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளிலும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தலைவர்கள் பரஸ்பர ஆதரவைத் தெரிவித்தனர். இது தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று பிரதமர் கூறினார்.

நேபாள பிரதமரின் தொலைபேசி அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவும், நேபாளமும் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டு மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை நினைவுகூர்ந்தார்.