Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மற்றும் எகிப்து அதிபர் இடையிலான தொலைபேசி உரையாடல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி , எகிப்து அதிபர் திரு. அப்தெல் பட்டாஹ் எல்-சிசியுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இரு தலைவர்களும், கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதித்ததுடன், தங்கள் நாடுகளில் மக்களைப் பாதுகாக்க அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும், தங்கள் நாடுகளின் அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதன் மூலம் பயன்பெறவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில், மருந்துப் பொருள்கள் விநியோகத்தை உறுதி செய்ய இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் இந்தியா எகிப்துக்கு அளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

இரு நாடுகளின் குழுக்கள் நெருங்கிய ஒத்துழைப்பைப் பராமரித்து, பரஸ்பர அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.