பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 21 முதல் 22 வரை பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்நிலை பரிமாற்றங்களின் பாரம்பரியம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அரசின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள இந்தியாவும், பூடானும் தனித்துவமான மற்றும் நீடித்த கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது ஆன்மீக பகிரும் பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இடையேயான அன்பான உறவுகள் நமது தனித்துவமான உறவுகளுக்கு வலுவையும் உற்சாகத்தையும் சேர்க்கின்றன. இந்தப் பயணம் இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், நமது மக்களின் நலனுக்காக நமது முன்மாதிரியான கூட்டாண்மையை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
———–
PKV/IR/RS/KRS/DL