Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை மும்பை செல்கிறார் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை அங்கு துவக்கி வைக்கிறார்.


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை மும்பை செல்கிறார்.

பாண்ட் குர்லா வளாகத்தின் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் இந்தியாவில் தயாரிப்போம் மையத்தை துவக்கி வைக்கிறார். இந்த மையத்தை சுற்றிப் பார்க்கும் திரு. நரேந்திர மோடியுடன், ஸ்வீடன் பிரதம மந்திரி, பின்லாந்து பிரதம மந்திரி மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு உயர்நிலை பிரமுகர்கள் செல்கின்றனர்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கவும் உற்பத்தி துறையில் நாடு அடைந்துள்ள சாதனைகளை உலகிற்கு உணர்த்தவும் இந்தியாவில் தயாரிப்போம் வாரக் கொண்டாட்டம் முக்கிய நிகழ்ச்சியாக அமைகிறது. இத்திட்டம் உலக அளவில் இந்தியாவை விரும்பிச் சென்று தயாரிப்பில் ஈடுபடும் இடமாக மேம்படுத்த உதவும். இந்த ஒரு வார கால கொண்டாட்டம் இந்திய மற்றும் உலக தொழில் தலைவர்கள், கல்வியாளர்கள், மத்திய மாநில நிர்வாகிகள் ஆகியோரை தொடர்பு கொண்டு ஒத்துழைப்பதற்கு வாய்ப்புகளை வழங்கும்.

நாளை காலை மும்பை சென்றடைந்தவுடன் முதலில் மும்பை கலைச் சங்கத்தில் புதிய கட்டிட வளாகம் திறக்கப்பட்டதற்கான நினைவு கல்வெட்டை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார்.

****