Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை சண்டிகர் மற்றும் உத்தராகண்ட்டிற்கு பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை சண்டிகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சண்டிகர் விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயணிகள் விமான முனையத்தை திறந்து வைக்க உள்ள அவர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுநிலை பட்டபடிப்பு நிறுவனத்தின் (பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்) 34வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்துக் கொள்கிறார்.

புதிய வீட்டு வசதி திட்டத்தை அவர் துவக்கி வைக்கிறார். சண்டிகரில் உள்ள செக்டார் 25ல் நடைபெறும் பொது கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

அதன் பிறகு உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு பிரதமர் பயணம் செல்கிறார்.