Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை ஆந்திர பிரதேசத்திற்கு பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (22 அக்டோபர், 2015) ஆந்திர பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அமராவதியில் நடைபெறும் ஆந்திர பிரதேசத்தின் புது தலைநகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வார்.

திருப்பதி விமானநிலையத்தில் கருடா முனையத்தை துவக்கிவைக்கிறார். திருப்பதி செல்லிடைப் பேசி உற்பத்தி மையத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பின் அவர் திருமலை திருக்கோவிலுக்கும் செல்வார்.